• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பகுத்தறிவு கதைகள்]

மூன்று தளபதிகளைக் கொள்ள இரண்டு பழங்கள்

யன் ஸி, ஏழாவது நூற்றாண்டில் ச்சி மாநிலத்தில் ஒரு இராஜதந்திரியாக இருந்தான். அவன் அவனுடைய அறிவான நிர்வாகத்திற்கு மிகவும் பெயர் பெற்றிருந்தான். கொங் சுன் ஜியே, தியன் கைய்ச்சியாங் மற்றும் கு யெஸி என்ற மூன்று தளபதிகளும் மிகவும் தைரியமானவர்களாகவும் பலமரனவர்களாவும் இருந்தனர். அவர்கள் தேர்ந்த போர் வீரர்களும் ஆவார்கள். ஆனால், நீண்ட கலமாக அரசனுடைய நம்பிக்கையின் காரணமாக கர்வம் உள்ளவர்களாகவும், அடாவடித்தனம் செய்பவர்களாகவும் மாறிவிட்டனர்.

அதே நேரத்தில் சென் லியாங்யு என்று அழ்க்கப்பட்ட ஒருவன் மூவருக்கும் இலஞ்சம் கொடுத்து அவர்கள் மூலம் அரசனைக் கவிழ்க்க திட்டமிட்டான்.

யன் ஸி மூவரையும் ஒழிப்பதற்கு ஓர் சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டிருந்தான். ஒரு நாள், அயல்நாடான லு மாநில அரசன் ஒரு பயணமாக இந்நாட்டுக்கு வந்தான். பன்ஸியும் மூன்று தளபதிகளும் எல்லோருமாக வரவேற்பு விருந்தில் இருந்தனர். யன்ஸி அவனுடைய சந்தர்ப்பம் வந்ததைக் கண்டான். அவன் தோட்டத்தில் இருந்து பீச் பழங்களை பறித்து வந்து விருந்தினர்களுக்குக் கொடுப்பதற்க்கு தன்னை அனுமதிக்கும் படி அரசனிடம் கேட்டான். அவன் மொத்தத்தில் ஆறு பழங்களை எடுத்தான். இரண்டு அரசர்களு்ககும் இரண்டு பீச் பழங்கல் பரிமாறப்பட்டன. இரண்டு பிரதம்மந்திரிகள் எனயைவற்றில் இரண்டை உண்டனர். எனவே, இரண்டு பழங்கள் மிகுதியாக இருந்தன. யன் ஸி அந்த இரு பழங்களையும் அதிக பங்களி்பபுக்கள் செய்தவர்களுக்குக் கொடுக்கும் படி அரசனிடம் கேட்டுக்கொண்டான்.

அரசன் அதைச் செய்தான். கொங் சுன் ஜியே, அவற்றில் முதலாவதைப் பெற்றான். ஏனென்னால் ஓர் புலி அரசனைத் தாக்கிய போது, அப்புலியை அவன் தாக்கி தன் உயரைக் காப்பாற்றியதாக அரசன் கூறினான்.

கு யெஜி இரண்டாவது பழத்தைப் பெற்றான். ஏனென்றால் மஞ்சள் ஆற்றின் நீரோட்டத்தில் ஓர் பெரிய இராட் சத ஆமையைக் கொன்று தனது உயிரை அவன் காப்பாற்றியதாக அரசன் கூறினான்.

இரண்டு சீச் பழங்களும் போயின. தியன் ஆவேசம் கொண்டான். அவன் பல சண்டைகளில் ஈடுபட்டு பல எதிர்ப்படைப் போர்வீரர்களை சிறைப்பிடித்தால், அரசன் தனகு ஓர் பழத்தை கொடுத்திருக்க வேண்டும் எனக் கூறினான். ஆனால் அடுத்த முறை நிச்சயம், ஓர் பழம் தருவதாகக் கூறினான். தியன் கைய்ச்சியாங் அதிக கோபம் கொண்டான். அவன் பெரிதும் அவமானப்பட்டதை உணர்ந்து தனது உடைவாறை உருவி தன்னைத் தானே கொன்றான். கொங் சுன், தியன் கைய் ச்சியாங் இவ்வாறு பழத்தைப் பெறாமல் இருக்க தான் மட்டும் பெற்றதால் வெட்கப்பட்டு தன் குரல்வளையை வெட்டிக்கொண்டான்.

இப்போது, கூ யெ ஸி, தனது மிகச் சிறந்த நண்பர்கள் இருவரும் இறந்ததைப் பார்த்தான். அவன் நாம் ஒன்றாகவே இறப்பதாக சத்தியம் செய்துள்ளோம். இப்போது நீங்கள் எல்லோரும் போய்விட்டீர்கள். நான் தனியே வாழ முடியாது எனக் கூறி அவனும் தன்னைத் தானே கொன்றான்.

யன் ஸி, இதைத்தான் வரும்பினான்.

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040