• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பகுத்தறிவு கதைகள்]

மோ ஸி பற்றிய ஒரு கதை

மோ ஸி ஐந்தாவது நூற்றாண்டில் வாழ்ந்த பண்டைய சீனாவின் தத்துவ வியலாளர். இவர் ஓர் தந்திரசாலியாகவும் பொறியாளராகவும் இருந்தார்.

இன்னொரு பொறியாளரான கொங் சூ பன் ஒரு சிறப்பான ஏணியைக் கண்டுபிடித்தார். இந்த ஏணியானது சூ எனும் வலுவான நாட்டின் அரசனால் ஓர் சிறிய மாநிலமான லூவுக்கு எதிராகச் சண்டையில் பயன்படுத்தப்படுவதாக இருந்தது. இது பலமான அரணுடைய வாயிலை நேரடியாக படைவீரர்கள் தாக்கி உள்ளே நுழைவதற்கு பதிலாக நகரச் சுவரில் ஏறிக்குதிப்பதற்கு சுலபமாக இருந்தது. மோ ஸி, யுத்த அறிவிப்பை கேள்விப்பட்டதும், பத்து பகலும் இரவுமாக பயணித்து போரைத் தடுக்கலாம் என்ற நம்பிக்கையில் கொங் சூ பான்னை சந்திப்பதற்கு சூ மாநிலத்துக்கு விரைந்தார்.

"ஒரு மனிதன் என்னை அவமதித்து விட்டான். நான் அவனை உங்கள் உதவியுடன் கொல்ல விரும்புகிறேன். நான் உனக்கு ஒரு பெரிய தொகை தருவேன்" என கொங் சூ பன்னிடம் கூறினார்.

"நான் ஒரு கெளரவமான மனிதன். நான் சும்மா பணத்திற்காக மக்களைக் கொலை செய்யமாட்டேன்"என்று அரசன் விடையளித்தான்.

சூ மாநிலம் பெரிய நிலத்தையும் அதிக மக்களையும் கொண்ட ஒரு வலுவான மாநிலமாகும். நீங்கள் இன்னும் பல வீனமான லூ மாநிலத்தைத் தாக்குவதற்கு உதவி செய்து கொண்டிருக்கின்றீர்கள். மக்களைக் கொல்வதில்லை என நீங்கள் சொல்கிறீர்கள். உங்கள் புதிய கண்டுபிடிப்பால் போரில் எத்தனை மக்கள் இறப்பார்கள் என உங்களுக்குத் தெரியுமா?உங்களுடைய சொந்தக் கைகளினாலேயே நீங்கள் அவர்களுடைய உயிர்களை எடுக்கின்றீர்கள்?இதற்கும் நீங்கள் கொல்வதற்கும் எதாவது வித்தியாசம் உண்டா?எனக் கேள்வி எழுப்பினார்.

கொங் சூ பன் வாயடைத்துப் போனார். அவரால் இந்த யுத்தம் சூ அரசனின் திட்டம் என்று மட்டுமே சொல்ல முடிந்தது. எனவே, இருவரும் அரசனைப் பார்க்கச் சென்றார்கள்.

"மேன்மையான உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்க முடியுமா? ஒரு மனிதன் ஆடம்பரமான வண்டியை வைத்திருக்கின்றான். இன்னும் அவன் அயலவரிடம் இருந்து தரம் குறைந்த வண்டியைத் திருகுகிறான். அவன் பெருந்தொகையான ஆடம்பரத் துணிகளைப் பெற்று இருக்கின்றான். இன்னும் அவன் அவனுடைய சுயலக வறியவர்களிடமிருந்து கிழிந்த ஆடைகளைத் திருகுகிறான். அவன் எவ்வகை மனிதனாக இருப்பான் என நீங்கள் நினைக்கிறீர்கள்."என அரசனிடம் மோ ஸி கேட்டார்.

அவன் பிறப்பால் கள்வனாக இருந்திருக்க வேண்டும் அரசன் நகைப்புடன் பதிலளித்தான்.

"மேன்மையான அரசனே சூ நிலத்திலும் உற்பத்தியிலும் ஒரு வளமான பலமான நாடு ஆகும். லூ மாநிலம், மிகச்சிறிய வறுமையான மாநிலமாகும். இப்போது சூ மாநிலம், லூ மாநிலத்தைத் தாக்கும். இந்நடவடிக்கை அந்தப் பணக்கார மனிதனின் நடத்தையை கொஞ்சம் ஒத்திருப்பது போல் நீங்கள் நினைக்க வில்லையா?"என மோ ஸி தனது கேள்வியை மேலும் தொடர்ந்தார்.

"நன்றாகக் கூறினீர்கள். கொங் சூ பன் எனக்காக அந்த ஏணியைக் கண்டுபிடித்து விட்டார். எனவே, நான் லூக்கு எதிராக இந்த யுத்தத்தைத் தொடரப் போகின்றேன்"என அரசன் கர்வமாகக் கூறினான்.

"ஏணி இருப்பது போரில் உங்கள் வெற்றி்ககு உத்தரவாதம் அல்ல. நான் உங்களுக்கு முன்னால் இறமைக்கு ஒரு போரை சிருட்டிக்கலாம்"என மோ ஸி வேண்டினான்.

அவர்கள் நகர சுவர் போலபாவித்து போலியாக இருக்கின்ற அவர்களுடைய உபகரணங்களைக் கொண்டு வந்தார்கள். மேலும் ஒரு போருக்கு தேவைப்படும் எனக்கருதப்பட்ட பாதுகாப்பு ஆயுதங்களையும் தாக்குதலுக்குப் பயன்படும் ஏணிகளையும் கொண்டு வந்தனர்.

கொங் சூ பன் பல தாக்குதல் வழிமுறைகளையும் தந்திரோபாயங்களையும் முயற்சித்தார். ஆனால், ஒவ்வொரு தடவையும் அவருடைய தாக்குதல்கள் மோ ஸியினால் தடை செய்யப்பட்டன.

இறுதியில், கொங் சூ பன் மோ ஸியைப் பார்த்து, "நான், உன்னை வெல்லுவதற்கு இன்னொரு வழியினைப் பெற்று விட்டேன். நான் அதைக் கூற மாட்டேன்"எனக் கூறினார்.

எனக்கு இது தெரியும். நான் ஒன்றும் கூற மாட்டேன் என மோ ஸி கூறினான்.

குழப்பமடைந்த அரசன் ஒரு விளக்கத்தைக் கேட்டான். "அவர் என்னைக் கொல்லக் கருதுகிறார். ஆனால் நான் பாதுகாப்பு வழிமுறையை எனது சீடர்களுக்குக் கூறி விட்டேன். எனவே நீங்கள் என்னைக் கொலை செய்தால் கூட உங்கள் போருக்கு உதவி கிடையாது"என மோஸி கூறினான். இறுதியாக சூ அரசன் லூவுக்கு திட்டமிடப்பட்ட தன்னுடைய தாக்குதலைக் கைவிட்டான்.

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040