• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பகுத்தறிவு கதைகள்]

அரசி தெளஹெர் செளவுக்கு சூ லொங்கின் அறிவுறுத்தல்

கி.மு ஐந்தாம் நூற்றாண்டி்ல செள ஒரு சிறிய நாடாக இருந்தது. அரிச தெளஹெர் செள, அரசின் அலுவல்களைப் பொறுப்பு எடுத்துக்கொண்டார். வலுவான ச்சின் நாடு இதற்கு எதிராக, ஒரு போர் தொடங்குவதாக இருந்தது. அரசி மற்றொரு வலுவான தேசமான ச்சினிடம் உதவி கேட்டாள். ஆனால், அரசி தெளஹெர் தனது இளைய மகனான இளவரசன் சாங்களை பிணையாக அனுப்பும் படி ச்சின், ஒரு நிபந்தனை விதித்தது. அரசி தெளஹெர், தனது இளைய மகனிடம் அதிக பிரியம் உடையவன். அவளின் மகன் பிணையாக இருக்கும் போது எதாவது ஆபத்து நேரலாம் எனப்பயற்று மிகவும் தயங்கினான். ச்சின் அரசின் நிபந்தனையை ஏற்க்கும் படி, தூண்டுவதற்கு முயற்சித்தவர்கள் மீது, அவள் கோபம் கொண்டாள். யாராவது இது விஷயத்தில் வற்புறுத்தினால் அவர்கள் முகத்தில் காறி உமிழ்ந்து அவமானப்படுத்துவேன் என்றாள்.

சூ லோங் என்ற ஓர் உயர் அதிகாரி அரசி தெளஹெரை பார்ப்பதற்கு வந்தார். அவன் ஆச்சரியப்படும் வகையில், அவளுடன் சும்மா பேசி, உடல் நலம் விசாரிக்க வந்ததாகக் கூறினார். அவர், தனது இளைய மகனுக்கு அரச சபையில் ஒரு பதவியையும் கேட்டார். அரசி தெளஹெர் ஓர் ஆணும் கூட தனது இளைய மகனிடம் காட்ட முடியும் என சிரித்தவாறு கூறினாள்.

ஒரு பெண்ணை விட ஒரு ஆண் அதிகம் செய்யலாம் என சூலொங் கூறினார். பேச்சுத்தொடர்ந்து.

"எல்லா பெற்றொர்களும் அவர்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வழியை அமைத்துக்கொடுக்க விரும்புகின்றார்கள்"என அவர் கூறினார். இதனுடன் அரசி தெளஹெர் உடன்பட்டாள். ஆனால், "நீங்கள் இளவரசன் சான்ஹன்னுக்கு சிறப்பாக வழியை அமைத்துக்கொடுக்காது கண்டு பயமடைகிறேன்"என்றார்.

எப்படி கூறுகிறீர் என தெளஹெர் மீண்டும் ஆச்சரியப்பட்டாள்.

"நீங்கள் வரலாற்றைப் பார்க்கலாம். அரசுரிமை வழமையாக பெயர்களை மாற்றிக்கொண்டிருக்கின்றது. இது எப்போதும் ஒரு குடும்பத்துடன் இருந்தது இல்லை. இளவரசர்கள் ஓர் அரசனுக்குரிய தகுதியை கொண்டிருக்க வில்லை என்பதை, இது கருதவில்லை. ஆனால், இளவரசர்கள் ஒரு அரசனுக்குரிய பண்புகளை பெற்றிருக்க வில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் நாட்டுக்கு அதிக பங்களிப்புச் செய்வதில்லை. அவர்கள் பட்டம் சூடும் போது ஒருவரும் அவர்களை மதித்து ஆதரவு வழங்க மாட்டார்கள். எனவே, அவர்கள் நீண்டகாலம் ஆட்சிசெய்ய முடியாது. இது, இளவரசர் சான்ஹென்னுக்கும் பொருந்தும். நீங்கள் அவருக்கு அதிகளவு கெளரவத்தையும், செல்வத்தையும் மற்றும் நிலத்தையும் கொடுக்கின்றீர்கள். ஆனால் அவருடைய நாட்டுக்கு பங்களிப்பு செய்வதற்கான எந்த வித சந்தர்ப்பத்தையும் உருவாக்க வில்லை. உங்களுக்குப் பிறகு இந்த நாட்டை ஆள்வது அவருக்கு கடினமாக இருக்கும்"என்றார்.

அரசி தெளஹெர் உணர்ச்சிவசப்பட்டு, இறுதியாக அவள் இளவரசன் சான்ஹனை ச்சிக்கு பிணையாக அனுப்பச் சம்மதித்தாள். இதற்கு ஈடாக செள தாக்கப்பட்டால் ச்சி வந்து காப்பாற்றுவதாக வாக்குறுதி கொடுத்தது.

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040