• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பகுத்தறிவு கதைகள்]

வெறுமை நகரத் தந்திரம்

ஜூ கோ லியாங் என்பது, சீனாவின் ஒவ்வொரு சுடிமட்ட மக்களும் அறிந்து இருக்கின்ற ஒரு பெயராகும். அவர், புலமை மிக்க அறிஞராகத் திகழ்ந்தவர். ஜு கோ லியாங் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி.

ஜூ கோ லியாங் பண்டைய சீனாவில் மூன்று நாடுகள் காலத்தில் (220—265)இருந்த சிறந்த இராஜ தந்திரியும் தந்திரசாலியும் ஆவார். அவர், இந்நாளில் தென்மேற்கு சீனா என அழைக்கப்படுகின்ற சூ தேசத்தின் தலைமை அமைச்சராகப் பணியாற்றினார். ஒரு சந்தர்ப்பத்திய தேசம் வடசீனாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த வெய் தேசத்திடம் தொடர்ச்சியாகப் பல பல தோல்விகளைச் சந்தித்தது. சூ தேசத்தின் எல்லையில் உள்ள ஒரு நகரத்தின் எல்லையில் 10000க்கும் குறைவான ராணுவ வீரர்களே நிறுத்தப்பட்டிருப்பதாக தளபதி சிமா யீ அறிந்தான். இவர், வெய் தேசத்தில் இருந்த ஒரு கபடமான ராஜதந்திரியாகவும், ஓர் உயர்ந்த தந்திரசாலியாகவும் இருந்தார். சூவின் எல்லை நிலவரத்தை அறிந்த இவர், இந்நகரத்தை முற்றுகையிட்டு, கைப்பற்றுவதற்காக 100000 படைகளுடன் சென்றார்.

வெய் இராணுவம் வருகின்றது என்ற செய்தியைக் கேட்ட நகரத்தில் இருந்த ஒவ்வொருவரும் செய்வது அறியாமல் திகைத்தனர். ஏனைய நகரங்களில் இருந்து ஆதரவை அழைக்க முடியாமல் கால தாமதமாகி விட்டது. ஜூ கோ லியாங் முன்னெப்போதும் இல்லாத துணிச்சலுடன் ஒரு முடிவு எடு்ததார். அவர், நகரவாசிகளையும் படைகளையும் நகரத்தில் இருந்து வெளியேற்றினார். நகர நுழை வாயில் கதவை அகலத் திறந்து விட்டார். ஒரு சில வயதுமுதிந்தோரை மட்டும், வீதிகளைப் பெருக்கி சுத்தம் செய்யும் படி கூறினார்.

சி மா யீ, நகரத்தை அடைந்த போது ஒரு அகலத்திறந்த நுழைவாயிலுடன் நகரம் வெறிச்சோடி கிடப்பதைக் கண்டார். இத்துடன், ஜூ கோ லியாங் பீரங்கி கட்டைகள் மீது இருந்து கொண்டு மிக அமைதியாக அவருடைய சீதார் என்ற இசைக் கருவியை வாசித்துக் கொண்டிருந்தார். இரண்டு வேலைக்காரப் பேயன்கள் அவருக்காக பணிவிடை செய்தனர்.

ஜூ கோ லியாங்கை, தளபதி சி மா யீ கவனமாக சமாளிக்க வேண்டும் என நினைத்தார். அவர், இசையில் இருந்து உண்மையிலேயே நகரம் வெறிச்சேரடிக் கிடக்கிறதா அல்லது சூ ராணுவ வீரர்கள் இந்நகரத்துக்குள் மறைந்து இருக்கிறார்களா எனபதை அறிய முயற்சித்தார். ஆனால், பரபரப்பு ஒரு துனி கூட வெளிப்படுத்த வில்லை. இசையை கேட்ட போது, சி மா யீ, ஒரு தர்மசங்கடமான நிலையில் காணப்பட்டான். திடீரென அமைதியான இசை வேகம் பெற்றது. இவ்விசையானது, சி மா யீயின் செவிகளில் தாக்குதலுக்கான ஒரு போர் முக்க இசை போன்று ஒலித்து அவனை நாணமடையச் செய்தது. இது, ஜூ கோ லியாங் அவனின் இராணுவத்தை ஒரு பதுங்கு குழுக்கள் வைத்து எதிர் தாக்குதலைச் செய்வதற்கான ஓர் யுத்தி என சி மா யீ தீர்மானித்தான். எனவே, அவன் தனது ராணுவத்தை பின்வாங்குவதற்குக் கட்டளை இட்டான். ஜூ கோ லியாங், நகரத்தின் உட்பறத்தில் பலமான படைகளை நிறு்ததி வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் நகரத்தின் வாயில் கதவினை அகலத் திறந்து வைத்திருக்க மாட்டார் எனத் தளபதி முடிவு செய்தார். உண்மையாகவே நகரம் அளவே, பாதுகாப்பு இன்றி வெறுமனவே இருக்கின்றது என்பது அவருக்குத் தெரியவில்லை. இத்தந்திரம், சூ தேசத்தை இன்னொரு தோல்வியையும் அதன் அழிவுகளையும் தவிர்ப்பதற்கும் உதவியது.


1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040