• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பகுத்தறிவு கதைகள்]

குதிரை பந்தயத்தில் தியன்ஜியின் வெற்றி

தளபதி தியன்ஜி, 2300 வருடல்களுக்கு முன்னர் ச்சி இராச்சியத்தில் ஓர் உயர் நிலை அதிகாரியாக இருந்தார். அக்காத்தில் அரசனுக்கும் பிரபுக்களுக்கும் இடையில் குதிரை பந்தயம் ஒரு விருப்பமான பொழுது போக்காக இருந்தது. ஒவ்வொரு தடவையும் தியான்ஜி அரசனிடம் தோல்வியடைந்தான். சுன் பின் என்ற பழம் பெருமை வாய்ந்த தற்திரசாலி தியான் ஜியின் வீட்டுக்கு வந்தார்.

சுன் பின், தன்னுடைய இராணுவத்தின் திறமையை விட வெய் அரசின் இராணுவத் திறமை உயர்வாக இருந்ததை கண்டு பொறாமை கொண்டார். இவர், தன்னுடைய மாணவன் பங் யூன் மூலம் வெய் அரசை தந்திரமாக மடக்கினார். அவர், விடுதலை செய்யப்பட்ட பின்னர், ச்சிக்குத் திரும்பி வந்து தளபதி தியன் ஜி வீட்டில் தங்கியிருந்தார். அவர், தியான் ஜிக்கு அவனுடைய குதிரை பந்தயத்தில் உதவி செய்யத் தீர்மானித்தார்.

அவர், தியன் மற்றும் அரசன் ஆகிய இருவரும் வைத்திரந்த நடுத்தர, உயர்வான மிக உயர்மானது என்ற மூன்று வேறுபட்ட ரகங்களைச் சேர்ந்த மூன்று குதிரைகளைப் பற்றி, அறிந்தார். ஒரு போட்டியில் மூன்று சுற்றுக்கள் இருப்பது ஓர் ஒழுங்குவிதியாக இருந்தது. ஒவ்வொரு குதிரையும் ஒரு சுற்றில் பயன்படுத்தப்பட வேண்டும். அரசன் நாட்டில் மிகவும் அதிகாரமுள்ள மனிதனாக இருப்பதால் ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள அவனுடைய குதிரைகள் தியன் ஜியுடையதை விட சிறந்த வையாக இருந்தன. அரசன் அவ்வாறு உயர்ந்த குதிரைகளை வைத்திருந்தான். ஒவ்வொரு தடவையும் அரசனுடைய குதிரைகளுக்கும் தியனுடைய குதிரைகளுக்கும் இடையில் உள்ள வேக வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததையும் சுன் பின் கவனித்தார். சுன்பின் ஒரு சிறிய தந்திரத்தைப் பின்பற்றி முத்ல சுற்றில் அரசனை விட தியான் ஜி ஓட்டத்தில் வெற்றி பெறுவதற்கு உதவினான்.

தியான் ஜி அவனுடைய நடுத்தர வகுப்புக் குதிரையை அரசனின் அதி உயர்தர வகுப்புக் குதிரைக்கு எதிராக ஓட விட்டான். அந்தச் சுற்றில் அவன் தோல்வியடைந்தான். ஆனால், அடுத்து அவன் தனது உயர்தரக் குதிரையை அரசனின் நடுத்தர வகுப்புக் குதிரைக்கு எதிராக ஓடி அதை தோற்கடித்தான். அடுத்து தனது அதி உயர்தர குதிரையால் அரசனின் உயர்தரக் குதிரையைத் தோற்க்கடித்தான்.

அந்த முடிவை அரசன் ஒரு போதும் எதிர்பாக்க்கவில்லை. அவன் தியனிடம் தன்னைத் தோற்கடித்த குதிரைகளை எங்கே பெற்றாய் எனக் கேட்டான். தியான் ஜி, சுன்பினின் தந்திரம் பற்றி அவனுக்குக் கூறினான். அரசன் சுன்பிள்னைச் சந்தித்தான். பின்னர், சுன்பின், இரண்டு அணிகளும் சமமான பலத்தைக் கொண்டிருக்ககும் போது பொருத்தமான தந்திரோபாயத்தால் வெற்றியைக் கொண்டு வரலாம் என அரசனுக்குக் கூறினான்.

பின்னர், அரசன், சுன்பின்னை தளபதி தியான் ஜிக்கு தந்திரோபாய ஆலொசகராக நியமித்தான். அதைத் தொடர்ந்து ச்சி அரசின் படைகள் சுன்பின்னின் உதவியுடன் பல போர்களில் வெற்றி பெற்றது.

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040