• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[ஊது குழல் இசைக்கருவி]
சிபிலி

சிபிலி என்பது ஒரு வகை இசைக்கருவியின் பெயர். அது கொரிய இன மக்களிடையில் பரவலாக காணப்படும் நாட்டுப்புற இசைக்கருவியாகும். முக்கியமாக, சீனாவின் ஜிலின் மாநிலத்து யென்பியென் கொரிய இனத் தன்னாட்சி வட்டாரத்திலும் கொரிய மக்கள் குழுமிவாழும் பிரதேசங்களிலும் அது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்விசையின் ஒலி பெரியது. கொரிய இனத் தனிச்சிறப்பு மிக்கது.

சிபிலி என்னும் இசைக்கருவி நீண்ட வரலாறுடையது. அது பண்டைக் காலத்தில் தோன்றியது. இவ்விசைக்கருவி, சீழ்க்கை, மூங்கில் குழாய் ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டது. சீழ்க்கையின் நீளம் 4 சென்டி மீட்டர். அது தோல் இல்லாத நாணலால்( reed) தயாரிக்கப்பட்டது.அது மூங்கில் குழாயால் தயாரிக்கப்பட்டது. அதன் நீளம் 20-25 சென்டி மீட்டர். விட்டம் சுமார் ஒரு சென்டி மீட்டர். 7 துளைகள் உள்ளன. அதன் பின் பகுதியில் ஒரு உச்ச ஒலி துளை உண்டு.

இவ்விசைக்கருவியை இசைக்கும் வழிமுறை, இதர பெரும்பாலான காற்று அசைவு இசைக்கருவி போல உள்ளது. இசைக்கலைஞர் மூங்கில் குழாயை நிமிர்த்தி வைத்துக்கொண்டு, சீழ்க்கை கருவி, வாய்க்குள் இருந்த வண்ணம், இடது கையால் மூங்கில் குழாயின் மேல் பகுதியிலுள்ள 3 துவாரங்களையும் எதிர் பக்கத்திலுள்ள உச்ச ஒலி துளையும் மூடுவதோடு, வலது கையால் கீழ் பகுதியிலுள்ள மற்ற 4 துளைகளையும் மூட வேண்டும்.

இவ்விசைக்கருவிக்கு, உச்ச ஒலி, மத்திம ஒலி, இரட்டை பிலி ஆகிய 3 வகைகள் உள்ளன. பாரம்பரிய உச்ச ஒலியுடன் கூடிய சிபிலி இசைக்கருவியானது, ஒரு ரகத்தை மட்டும் வெளிப்படுத்த முடியும். அது மாற்றியமைக்கப்பட்ட பின், ராகம் மாறலாம். மத்திம ஒலி சிபிலியின் திறமையும் உச்ச ஒலி சிபிலியின் திறமையும் கிட்டத்தட்ட ஒன்றாக உள்ளன. தனி ஒலி ஏற்படலாம். இரட்டை ஒலியும் ஏற்படலாம். அதன் ஒலி அளவு, தனிக்குழாய் கொண்ட சிபிலியை விட பெரியது.

1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040