• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[ஊது குழல் இசைக்கருவி]

சங்

 

சங் என்பது சீனாவின் தொன்மை வாய்ந்த ஒருவகை ஊதல் இசைக்கருவியின் பெயர். உலகில் மிக முன்னதாகப் பயன்படுத்தப்படும் நாண் இசைக்கருவி இது. அத்துடன், மேலை நாடுகளின் இசைக்கருவி வளர்ச்சியில் இது முக்கிய பங்கு ஆற்றியுள்ளது.

1978ல், சீனாவின் ஹுபெய் மாநிலத்து சுய் மாவட்டத்தில் சென்ஹௌயி கல்லறையில் தோண்டியெடுக்கப்பட்ட சுமார் 2400 ஆண்டு வரலாறுடைய பாவ்சங் எனும் இசைக்கருவிகள், சீனாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிக துவக்கக் காலத்தின் சங் ஆகும்.

சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங் எனும் இசைக்கருவி உருவாக்கப்பட்டது. துவக்கத்தில், அது பெய்சியொ போன்றது. உள்ளே நாணன் இல்லை. வேறுபட்ட ஒலிகளைக் கொண்ட மூங்கில் குழல்களைக் கயிற்றால் அல்லது வெட்டு மரத்தால் வரிசையாகக் கட்டுவது மட்டுமே. பின்னர், சங் என்னும் இசைக்கருவியில் மூங்கிலினால் செய்யப்பட்ட நாண்களை மக்கள் அதிகரித்திருப்பதால் இவ்விசைக்கருவிக்கும் பெய்சியொ எனப்படும் இசைக்கருவிக்கும் வித்தியாசம் உள்ளது.

சங் என்னும் இசைக்கருவி நீண்ட காலமாக இருந்துவருவதால், வெவ்வேறு பகுதிகளில் வேறுபட்ட வடிவ சங் உருவாகியுள்ளது. நவ சீனா நிறுவப்பட்ட பின், சீனாவின் இசை அமைப்பாளர்களும் இசைக் கலைஞர்களும் இவ்விசைக்கருவியைத் தொடர்ந்து சீர்திருத்தி, பல புதிய வகைகளை வரைந்து தயாரித்துள்ளனர். இதனால், குறுகலான ஒலி வரம்பு, ராகம் மாற இயலாது, வேகமாக இசைக்கும் வசதியற்றது என்பது போன்ற குறைப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், இவ்விசைக்கருவிக்குப் புதிய ஆற்றல் கொடுத்துள்ளது.

இவ்விசைக்கருவியின் ஒலி இனிமையானது. தெளிவானது. மத்திம ஒலி மென்மையானது. கீழ் ஒலி பெரியது. அத்துடன், சீனாவின் பாரம்பரிய காற்றுக் குழல் இசைக்கருவிகளில் கூட்டு ஒலியை ஏற்படுத்த வல்ல ஒரேயொரு இசைக்கருவி இது ஆகும். இதர இசைக்கருவிகளுடன் இணைந்து இசைக்கும் போது, இசைக்குழுவின் ஒலி அளவைச் சரிப்படுத்தலாம். பெரிய தேசிய இன இசைக்குழல் மற்றும் நரம்பிசைக் குழுவில், சங் எனப்படும் இசைக்கருவியின் உச்ச ஒலி, மத்திம ஒலி மற்றும் கீழ் ஒலி பயன்படுத்தப்படும் சாத்தியமும் உண்டு.

1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040