• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[ஊது குழல் இசைக்கருவி]
 

திச்சி(புல்லாங்குழல், மூங்கில் குழல்)

திச்சி அதாவது புல்லாங்குழல், சீனாவில் பரந்த அளவில் பயன்படும் காற்று இசைக்கருவியாகும். இது, மூங்கிலால் தயாரிக்கப்பட்டதால், சீனாவின் மூங்கில் குழல் என்றும் அழைக்கப்படுகின்றது.

இவ்விசைக்கருவி, ஒரு மூங்கில் தயாரிக்கப்பட்டது. உள்ளே இருக்கின்ற கவைக்களை நீக்கி, ஊதும் துளை ஒன்றும், மெல்லிய தோல் துளை ஒன்றும் ஒலி ஒழுப்பும் 6 துளைகளும் போடப்பட வேண்டும். ஊதும் துளைதானது, புல்லாங்குழலின் முதல் திறப்பு. இதன் வழியே காற்று ஊதப்பட்டு, குழலுக்குள்ளே காற்று அசைவதால் ஒலி எழுகிறது. மென் தோல் துளையானது, புல்லாங்குழலின் 2வதாக உள்ளது. மூங்கிலின் மென் தோலால் ஒட்டுவதற்கு அது பயன்படுத்தப்படும். மூங்கிலின் மென் தோல் அடிக்கடி நாணலின் மென் தோலால் அல்லது மூங்கிலின் மென் தோலால் தயாரிக்கப்படும். காற்று அசைவினால், இத்துளையிலிருந்து தெளிவான இனிமையான ஒலி எழும்பும்.

புல்லாங்குழல் மிகவும் சிறியது. அதன் அமைப்பும் எளிமையானது. எனினும் அது ஏழாயிரம் ஆண்டுகள் வரலாறுடையது. சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன் எலும்பால் தயாரிக்கப்பட்ட புல்லாங்குழல் மூங்கிலால் தயாரிக்கப்பட்ட குழலாக மாற்றியமைக்கப்பட்டது. கி.மு முதலாவது நூற்றாண்டின் முடிவில் ஹென்வு மன்னராட்சிக் காலத்தில், புல்லாங்குழல் ஹென்சுவெ என்று அழைக்கப்பட்டது. சீன மொழியில் ஹென் என்ற சொலின் பொருள் குறுக்கு என்பதாகும். சுவெ என்ற சொல்லின் சீன மொழி அர்த்தம் ஊதுவது என்பதாகும். குறுக்காகப் பிடித்து ஊதுவது என்று அது பொருள்படுகின்றது. அப்போது மேளம் தட்டும் போது ஊதுவதற்கு இவ்விசைக்கருவி மிகவும் அதிகமாய் பயன்பட்டது. 7ஆம் நூற்றாண்டு முதல், இவ்விசைக்கருவி மேலும் மாற்றியமைக்கப்பட்டு மென் தோல் துளைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. 10ஆம் நூற்றாண்டில், புல்லாங்குழல், கவிதை வாசிப்புக்கு முக்கிய இணை ஒலியாகப் பயன்படுத்தப்படத் துவங்கியது. நாட்டுப்புற இசை நாடகங்களின் இசைக் குழுக்களிலும் சிறுபான்மை தேசிய இன இசை நாடகங்களின் இசைக்குழுக்களிலும் புல்லாங்குழல் இன்றியமையாத இசைக்கருவியாக ஆகிவிட்டது. பலவகைகளில் அதைப் பயன்படுத்தலாம். வெவ்வேறு உணர்வுகளை இதன் மூலம் வெளிப்படுத்தலாம். தவிர, உலகிலுள்ள பல்வேறு ஒலிகளையும் அது வெளிப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, பல்வகைப் பறவைகளைப் போல ஒலி எழுப்பலாம்.

பலவகை புல்லாங்குழல்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, 7 அல்லது 11 துளைகளைக் கொண்ட வேறுபட்ட வகை புல்லாங்குழல்கள் உள்ளன. சீனாவின் வட பகுதியில் பயன்படுத்தப்படும் புல்லாங்குழலுக்கும் தென் பகுதியில் பயன்படுத்தப்படும் புல்லாங்குழலுக்கும் வித்தியாசம் உண்டு.


1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040