• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[ஊது குழல் இசைக்கருவி]

குவெங்ச

குவெங்சி என்பது, ஒரு வகை ஊதல் இசைக்கருவியின் பெயர். அது நீண்ட வரலாறுடையது. பண்டைகாலத்தில் பாரசீகம் என்னும் நாட்டில் தோன்றியது. தற்போது, இந்நாட்டின் பெயர் ஈரான் என்பதாகும். பண்டைகால சீனாவில, இது, பிலி அல்லது லுகுவான் என்று அழைக்கப்பட்டது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மேற்கு ஹான் வமிச காலத்தில், சீனாவின் சின்ஜியாங் வட்டாரத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவியாக மாறிவிட்டது. பின்னர், இவ்விசைக்கருவி, சீனாவின் மத்திய பகுதியில் காணப்பட்டது. காலப்போக்கில் இவ்விசைக்கருவியை இசைக்கும் நுட்பம் மேம்பட்டு வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது, குவெங்சி என்னும் இசைக்கருவி, சீன மக்களிடையில் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. வடப் பகுதி சீன மக்கள் விரும்பும் இசைக்கருவியாக மாறியுள்ளது.

இவ்விசைக்கருவியின் ஒலி பெரியது. தெளிவானது. ஒலியின் அளவு விசாலமானது. மிகுந்த கிராமிய மணம் கமழுகின்றது. அது, தனியொலி, கூட்டு ஒலி மற்றும் இணை ஒலியாகப் பயன்படுத்தப்படுவது வழக்கம். குறிப்பாக, வட சீனாவின் சில இசைக்கருவிகளில் இது மிகவும் முக்கியமானதொரு ஊதல் இசைக்கருவியாகும். இதை ஊதும் முறைகள் பல உள்ளன. இவ்விசைக்கருவியில் அடிக்கடி பயன்படுத்தப்படும் நடுக்கல் ஒலி, வழுவழுப்பான ஒலி முதலியவை தவிர, அடித்தல் ஒலி, பல் ஒலி முதலிய ஒலிகளையும் பயன்படுத்தலாம். விரலால் இசைக்கும் நுட்பம் தவிர, சீழ்க்கை வாய்க்குள் இருக்கும் இடத்தைப் பொறுத்து, குவெங்சின் எனும் இசைக்கருவியின் அளவு தீர்மானிக்கப்படும். இவ்விசைக்கருவியை ஊதும் போது, வாய் வடிவ மாற்றத்துக்கேற்ப, மனிதக் குரல் மற்றும் விலங்குகளின் குரல் போல ஒலி ஏற்படுத்தலாம்.

குவெங்சி என்னும் இசைக்கருவியில் வகைகள் அதிகம். இதில், பெரிய, நடுத்தர, சிறிய என்று பல வகைகள் உள்ளன.

இவ்விசை வழுவழுப்பானது. மகிழ்ச்சியானது. சீனாவின் இசை நாடகத்தில் கதா நாயகர் ஆடையை மாற்றும் போதும் வழியில் நடந்துசெல்லும் போதும் இவ்விசைக்கருவி, இணை இசையொலியாகப் பயன்படுத்தப்படுவது வழக்கம்.

1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040