• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[ஊது குழல் இசைக்கருவி]

சியுன்

சியுன் என்பது ஒரு இசைக்கருவியின் பெயர். இது, சீனாவின் மிகவும் தொன்மை வாய்ந்த ஊதுதல் இசைக்கருவிகளில் ஒன்றாகும். இது சுமார் 7 ஆயிரம் ஆண்டுகள் வரலாறுடையது. ஷலியுசிங் எனப்படும் ஒரு வகை வேட்டையாடும் கருவி இவ்விசைக்கருவியின் துவக்க வடிவமாகும். பண்டைக் காலத்தில், மக்கள் அடிக்கடி கயிற்றால், ஒரு கல் அல்லது மண் உருண்டையைக் கவணில் வீசியெறிந்து பறவையை அடித்து வேட்டையாடினர். சில உருண்டைகளின் உட்பகுதி காலியாக இருப்பதால் அதை வீசியெறிந்த போது, காற்றினால் ஒலி ஏற்பட்டது. பின்னர், மக்கள் இதை ஊதுவதற்குப் பயன்படுத்தினர். இதனால், ஷலியுசிங் படிப்படியாக சியுன் எனப்படும் இசைக்கருவியாக மாறிவிட்டது. துவக்கத்திலே, சியுன், பொதுவாக கல் அல்லது எலும்பால் தயாரிக்கப்பட்டது. காலம் போக, போக, அது மண்ணால் தயாரிக்கப்பட்டது. அதன் வடிவம், பந்து, மீன், பேரிப் பழம் உள்ளிட்ட பல வடிவங்கள் உடையவை. இவற்றில் பேரிப் பழ வடிவம் நடைமுறையில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

சியென் மேற்பகுதியின் நுனியில் துறை உள்ளது. அதன் அடிப்பகுதி சமதளமானது. இவ்விசைக்கருவியின் ஓரத்தில் சில துளைகள் உள்ளன. துவக்கத்தில் சியுன் எனப்படும் இசைக்கருவிக்கு ஒரு ஒலி துளை மட்டும் இருந்தது. பின்னர், அது பல துளைகளாக அதிகரித்தது. கி.மு. 3வது நூற்றாண்டின் முடிவில் தான் 6 துவாரங்களைக் கொண்டு சியென் தயாரிக்கப்பட்டது.

சீன இசைக்கல்லூரியின் பேராசிரியர் சாவ்சென் 20ஆம் நூற்றாண்டின் 30வது ஆண்டுகளின் முடிவில் பண்டை கால மாதிரி மட்பாண்ட வடிவ சியுன் தயாரித்தார். பின்னர் தியென்ஜின் இசைக் கல்லூரியின் பேராசிரியர் சென்சுன், தொன்மை வாய்ந்த பேரிப் பழ வடிவமுடைய 6 துளைகள் இடம்பெறும் சியனின் அடிப்படையில் புதிய ரக 9 துளைகளைக் கொண்ட மண்ணாலான சியனைத் தயாரித்தார். இந்தப் புதிய வகை சியுன், பழைய சியுனின் வடிவத்தையும் ஒலி தரத்தையும் நிலைநிறுத்தும் அதே வேளையில், அதன் ஒலி அளவும் பெருகியுள்ளது. ராகத்தை மாற்றக் கூடிய இசைக்கருவியாக அது திகழ்கின்றது. அத்துடன், அதன் ஒலி தனிச்சிறப்பு வாய்ந்தது. தவிர, குறிப்பிட்ட இடைவெளி இல்லாத ஒலி துளைகள் மாறப்பட்டுள்ளன. இக்கால மக்கள் இசைக்கருவியை இசைக்கும் வழக்கத்தின் படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால், இதை இசைப்பது மேலும் வசதியாக உள்ளது. தனியொலி, கூட்டு ஒலி, இணையொலி ஆகியவற்றுக்கு இதை பயன்படுத்தலாம்.

9 துளைகளைக் கொண்ட மண் சியுன் தயாரிக்கப்பட்டிருப்பது, சீனாவின் தொன்மை வாய்ந்த சியுன் புது வடிவம் பெற்றுள்ளதைக் காட்டியுள்ளது. இதற்குப் பின்னர், பேராசிரியர் சென்சுனின் மற்றொரு மாணவரான ஹுபெய் மாநிலத்து இசை நடனக் குழுவுறுப்பினர் சௌ லியான் சான் padank எனும் வெட்டு மரத்தால் 10 துளைகளைக் கொண்டு சியுனை தயாரித்தார். இதன் விளைவாக, உச்ச ஒலியை ஊத முடியாத குறைபாடு நீக்கப்பட்டது.

சீன இசை வரலாற்றில், அரண்மனையில் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் இசைக்கருவி சியுன். அரண்மனை இசையில் இவ்விசைக்கருவி, சுன்சியுன், யாசியுன் ஆகிய இரண்டு வகைகளைக் கொண்டது. சுன்சியுன் எனப்படும் இசைக்கருவி முட்டை போன்ற சிறிய வடிவம் உடையது. அதன் ஒலி சற்று மேலானது. யாசியுன் எனப்படும் இசைக்கருவி பெரியது. அதன் ஒலி தாழ்ந்தது. அது மூங்கிலிலான காற்றுக் குழல் இசைக்கருவியான chiவுடன் இணைந்து இசைக்கப்படுவது வழக்கம். சீனாவின் துவக்கக்காலத்தைச் சேர்ந்த கவிதைத் தொகுதியில் அண்ணா சியுன் என்னும் இசைக்கருவியை ஊதும் போது, தம்பி chi ஊதுவார் என்ற கூற்று இடம்பெறுகின்றது. சகோதரர்களுக்கிடையிலான அன்பான பாசத்தை இது பிரதிபலிக்கின்றது என்று பொருள்.

1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040