• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:பெய்ஜிங் கட்டிடக் கலை
  2013-02-01 16:51:50  cri எழுத்தின் அளவு:  A A A   

லெய் திங்ச்சங் என்பவர்தான் இந்த கோடைக்கால மாளிகையின் தலைமை கட்டிடவியலாளர். ச்சிங்யி பூங்காவாக இருந்த இடத்தை மறுசீரமைத்து, புதிய வடிவத்தில் கோடைக்கால மாளிகையாக உருவாக்கித் தந்தவர் இந்த லெய் திங்ச்சங்தான். பேரரசி சிஷுவை மகிழ்ச்சிப்படுத்த, இந்த பூங்காவின் மறுசீரமைப்பில் ஃபூ எனப்படும் மகிழ்ச்சி, லூ எனப்படும் செல்வம், ஷோ எனப்படும் நீடுவாழ்க்கை ஆகிய கருத்துக்களை உட்புகுத்துமாறு தலைமை கட்டிடவியலாளர் லெய் திங்ச்சங் அறிவுறுத்தப்பட்டாராம்.

நீடுவாழ்க்கை மலை எனப்படும் வான்ஷோ மலையின் அடிவாரத்தில் ஒரு ஏரியை கட்டியமைக்கச் செய்தார் லெய் திங்ச்சங். இந்த மலையின் மேலிருந்து ஏரியை பார்த்தால் பீச் கனியை போலத் தெரியும். கோடைக்கால மாளிகையினுள்ளே இருக்கும் குன்மிங் ஏரிதான் அது. அந்த ஏரியில் 17 வளைவுகள் கொண்ட ஒரு பாலத்தை காணலாம். இந்த பாலத்துக்கு அருகே லெய் திங்ச்சங் ஆமை வடிவத்தில் குட்டி குட்டி தீவுகளை உருவாக்கினார். இந்த ஆமைகளும் நீடுவாழ்க்கையின் சின்னங்களாக கருதப்பட்டவையே. அவ்வாறே குன்மிங் ஏரியின் அருகேயுள்ள புத்த ஊதுவத்தி கோபுரத்தின் பக்கச் சுவர்களில் மகிழ்ச்சியை அடையாளப்படுத்தும் ஃபு எனும் வவ்வாலின் இறக்கைகளது வடிவத்தில் அமைப்புகளை செய்தார் லெய் திங்ச்சங். இப்படி மங்கலகரமான சின்னங்களையும், செய்திகளையும் உள்ளடக்கியதாகவே வீடுகளும், கட்டிடங்களும் பண்டைய சீனாவில் வடிவமைக்கப்பட்டன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040