• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்ஹாய் பயணம்
  2013-03-25 14:23:51  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காய் வேர்ல்ட் பைனான்சியல் சென்டர் என்கிற கட்டிடமும் 1614அடி உயரம். இந்தக் கட்டிடம் 1997ல் கட்டத்துவங்கி 2008ல் முடிக்கப்பட்டது. உலகின் மூன்றாவது உயரமான கட்டிடமாக இருக்கிறது.

நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான நான்ஜிங் ரோடு ஐந்து முதல் ஆறு கிலோமீட்டர் நீளமுடையது. வாணிக தளமான கிழக்கு நான்ஜிங் ரோடு ஹாங்ஃபூ மாவட்டத்திலும், ஐரோப்பிய நாகரீகம் நிரம்பிய மேற்கு நான்ஜிங் ரோடு ஜிங்யான் மாவட்டத்திலும் இருக்கிறது.

அடுக்கு மாடி வணிக வளாகத்தில். வீட்டு உபயோகப்பொருட்கள், தொலைதொடர்பு சாதனங்கள், புகைப்படக் கருவிகள், உடற்பயிற்சி சாதனங்கள், உடைகள், அலங்காரப் பொருட்கள் நகைகள், கடிகாரங்கள், கண்ணாடிகள், புத்தகம் அழகு சாதன பொருள்கள், , குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுப்பொருள்கள், சீனகுடைகள், எல்லாமே இந்த வணிக வளாகத்துக்குள் கிடைக்கிறது. சீனத்து பட்டு, சீன பாரம்பரிய உடைகள் என அப்போது திருவிழா கூட்டம் கூட்டம் மாதிரி ஜே ஜேனு இருக்கிறது.

புண்ட். ஷங்காய் நகரின் மையத்தில் ஓடுகிற நதிகரையை ஒரு சமதளமாக மாற்றி அதன்மேல் கடைகள், பூங்காக்கள், அமைத்து அலங்கரமாக காட்சியளிக்கிறது. நான்ஜிங் வீதியும், பண்டு தெருவும் சேருமிடத்தில் ஷாங்காயின் முதல் கம்யூனிஸ்டு மேயரின் வெண்கலசிலை உள்ளது. வானாளாவிய கட்டிடங்கள் சுற்றிலும் வான் தழுவிய கட்டிடங்கள், இரவு நேர விளக்குகளின் ஒளியில் ஒரு சொர்க்கலோகமாக காட்சியளிக்கிறது.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040