லாங்மன் கற்குகையில் ஏராளமான மதம், நுண்கலை, ஓவியம், நேர்த்தியான கையெழுத்துக்கள், இசை, உடுப்பு, நகை, மருத்துவம், மருந்து, கட்டடம், சீன மற்றும் வெளி நாட்டுப் போக்குவரத்து ஆகியவை பற்றிய வரலாற்று தகவல்களும் உள்ளன. இதனால், இது, பெரிய ரக மலை பாறைகளை குடைந்து கட்டப்பட்ட குகை கோவிலாகவும், அருங்காட்சியகமாகவும் திகழ்கிறது. உலகப் பண்பாட்டு மரபுச்செல்வத்தைத் தேர்ந்தெடுக்கும் வரைமுறைப் படி லாங்மன் கற்குகை 2000ஆம் ஆண்டு நவம்பர் 30ந் நாள் உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
லாங்மன் வட்டாரத்திலுள்ள கல்குகைகளும் புத்தர் உருவச்சிலைகளும் சீனாவின் வடக்குவெய் வமிச காலத்தின் பிற்காலத்திலும் தாங் வமிச காலத்திலும் (கி.பி.493-907) மிக பெரிய அளவிலான கலை வடிவத்தைப் பிரதிபலித்துள்ளன.
இந்த கலைப் படைப்புகள் சீனாவின் கல் செதுக்கும் கலையின் உயர்ந்த நிலையைச் சித்திரிக்கின்றன என்று உலக மரபுச்செல்வ ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது.