இந்த அரண்மனை
1750 இல்சி யான்லாங் என்ற அரசரால் கட்டப்பட்டது. பல்வேறு போர்களினால் சிதைந்த இந்த மாளிகை பின்னர் 1873ம் ஆண்டு மீண்டும் புதுமைபடுத்தப்பட்டது. பேரரசி சிஷியின் 40வது பிறந்த நாளுக்கான பரிசாக, பேரரசர் குவாங்ஷீ வழங்கியதுதான் ஈ ஹ யுவான் மாளிகை. ஓரு பூங்காவாக இருந்த இந்த இந்த பேரரசிக்கு பரிசளிக்க எண்ணி அதை சிறப்பாக வடிவமைத்தார் பேரரசர் குவாங்ஷீ. சிங்யீ பூங்காவாக இருந்த இந்த இடமே பின்னர் கோடைக்கால மாளிகையாகமாற்றப்பட்டது.பெய்ஜிங்கின் மத்திய பகுதியில் இருந்து ஒரு 12 கிலோமீட்டர் தொலைவில் வடக்குதிசையில் உள்ளது இந்தபூங்கா. ஏரிமற்றும் பூங்காகளினால் சூழப்பட்டிருக்கிறது இந்தமாளிகை. இதை சுற்றி குன்மின்ஏரியும் பலயுகங்களை கடந்த இந்த மலையும் இருக்கிறது. முதலில் இதை சின்யியுவான் என்றுஅழைத்தார்கள். தெளிவான நீரலைகளின் பூங்கா என்றும் அழைத்தார்கள். 19 நூற்றாண்டில் இது கோடைகால அரண்மனை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.