கோடைக்கால மாளிகையினுள்ளே இருக்கும் குன்மிங் ஏரி, பீச் பழத்தின் வடிவத்தில் இருக்கிறது. மாளிகையின் மத்திய பாகத்தில் காணப்படும் 41 மீட்டர் உயர கோபுரம், புத்த ஊதுவத்திகோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்தின் பக்கசுவர்கள் வவ்வாலின் இறக்கைகளை போன்ற அமைப்புடன் காட்சியளிக்கிறது. பீச் சீனாவில் நீண்ட வாழ்வினை குறிக்கும் அடையாள சின்னமாகவும், வவ்வால்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையின் சின்னமாகவும் கருதப்படுகின்றன.
பேரரசி சிஷுவை மகிழ்ச்சிப்படுத்த, ஃபூ எனப்படும் மகிழ்ச்சி, லூஎனப்படும் செல்வம், ஷோ எனபது நீண்ட வாழ்க்கையையும் குறிக்குமாறு இந்த பூங்கா அமைக்கபட்டிருக்கிறது. நெடிய வாழ்க்கை மலை எனப்படும் வான்ஷோ மலையின் அடிவாரத்தில் ஒரு ஏரியைகட்ட செய்தார்குவாங் ஷீ. இந்த மலையின் மேலிருந்து குன்மிங்க் ஏரியை பார்த்தால்பீச் போலத் தெரியும். அந்தஏரியில் 17 வளைவுகள் கொண்ட ஒரு பாலத்தை காணலாம்.இந்த பாலத்தில் 540 சிங்கங்கள் சித்திரங்களாக செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிங்கமும் வெவ்வேறு தோரணையில் உள்ளது. இந்த பாலத்துக்கு அருகே ஆமை வடிவத்தில் குட்டி குட்டி தீவுகளை உருவாக்கினார். ஆமைகள் நீண்ட வாழ்க்கை சின்னங்களாக கருதப்பட்டவையே.
ஏரியின் ஒரு கரையில் பிரம்மாண்டமான வெள்ளைப்பளிங்கு ஓடம் அலங்காரத்துடன் கம்பீரமாகநிற்கிறது. சீனத்துஅரசிகள் அங்கே உட்கார்ந்து டீ குடித்தபடி இந்த இயற்கைகாட்சியை ரசித்தபடி அமர்ந்திருப்பார்கள். சில சமயங்களில் அவர்கள் ரசிக்க படகுகளில் வீர தீரவிளையாட்டுகள் நடைபெறும். ஏரிகளில் தண்ணீரில் ஏராளமான தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும் ரம்மியமானகாட்சி மனதை கொள்ளை கொள்கிறது.