• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கோடைகால அரண்மனை
  2013-05-20 09:42:33  cri எழுத்தின் அளவு:  A A A   

இக்கோடைகால அரண்மனையின் எதிரில் குன்மிங் ஏரியும் உள்ளது. அதன் பக்கத்தில் 195 அடி உயரமுள்ல நீண்ட வாழ்நாள் குன்றில் மூன்று அடுக்கு மாளிகை உள்ளது. 70,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அரண்மனை வளாகத்தில் அழகிய கட்டிடங்கள், பூங்காக்கள், மற்றும் கலை மண்டபம் இருக்கிறது. இந்த ஏரி முற்றிலும் செயற்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் இருந்த மண்ணை குன்றாக குவித்து அதன் மேல் இந்த அரண்மனையை கட்டியுள்ளார்கள். கோடை அரண்மனை பூங்காக்களும் ஏரியும் சூழ்ந்த ரம்மியமான இடத்தில் சூரிய ஒளியில் மலர்களின் நறுமணத்தில் மாலை வேலைகளில் பேரரசர்கள் உலா போகும் இடமாகவும் இருந்தது. தோட்டகலை நிபுணர்கள் அழகிய நடைபாதை அமைத்து வண்ன வண்ண தாவரங்கள் பூக்களை பதியமிட்டனர்.  பாக்ஸ்ர் கலகத்தின்போது இந்த குன்றின் மேல் இருந்த அரண்மனையை பிரான்சும், இங்கிலாந்தும் தாக்கியது.1886-1902 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இந்த பூங்கா புதுப்பிக்கப்பட்டது.

கோடை பூங்காவின் அழகே அதை சுற்றியிருக்கும் இயற்கைவளங்களான ஏரி, மலை மற்றும் பூங்கா தான். கோடை காலமாளிகையை 4 பாகங்களாக பிரிக்கலாம். தர்பார்பகுதி, முன்மலைபகுதி, பின்மலைபகுதி மற்றும்ஏரிபகுதி. தர்பார்பகுதி இந்த அமைப்பின் வடகிழக்குதிசையில் உள்ளது. அரண்மனை வாயில் கிழக்கு வாயிலில்லிருந்து குன்மின் ஏரியின் வடகிழக்கு கரைவரை அமைந்துள்ளது.  இங்கே தான் குவான்சூசக்ரவர்த்தி, அவரின்ராணி, அரசு அலுவலர்கள் எல்லோரும் அரசவிவாதங்கள், சில முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். அரண்மனையில் வேலைசெய்பவர்களும் இங்கே தான் வசித்தனர். அவர்களுக்கென்று தனி இடம் இருந்தது.

உலகத்தின் சிறந்த பூங்காக்களில் ஒன்றான கோடைக்கால மாளிகை சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது.நீண்ட வாழ்நாள் குன்றின் மேல் டோபோ கிளேஸ்டு பகோடா என்ற புத்தர் கோயில் உள்ளது. 1998 டிசம்பர் யுனெஸ்கோ இந்த கோடைகால மாளிகையை உலகத்தின் பழக்கால மாளிகை என்று அறிவித்தது. 


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040