• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கவர்ந்திழுக்கும் சீனா: குவாங் தோங் மாநிலப் பண்பாடு
  2013-06-27 21:22:46  cri எழுத்தின் அளவு:  A A A   

வணக்கம் அன்பான நேயர்களே, கவர்ந்திருழுக்கும் சீனா எனும் பொது அறிவுப் போட்டியின் 4வது கட்டுரையில், வான்மதியுடன் சேர்ந்து, சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள குவாங் தோங் மாநிலம் பற்றி அறிந்து கொள்வோம். முதலில், இன்றைய இரண்டு வினாக்களை முன்வைப்போமா?

1. உலகம் முழுவதிலும் 10 கோடிக்கு மேலானோர் Cantonese பயன்படுத்துகின்றனர். இந்த மொழி சீனாவின் எந்த மாநிலத்தில் பேசப்படுகிறது?

2. சீனாவிலிருந்து உலகிற்கு பரவிய முதலாவது இசை நாடகம் எது?

இவ்விரு வினாக்களோடு, இன்றைய கட்டுரையை கவனமாகக் கேளுங்கள்.

குவாங்சோ மாநகரம், முன்பு Canton என அழைக்கப்பட்டது. சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள அது, 2200 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உடைய புகழ்பெற்ற பண்பாட்டு நகரம். மூன்று முறை தலைநகராக இருந்த குவாங்சோ, சீனாவில் வெளிநாட்டு வணிகக் கப்பல்கள் நுழைந்த முதலாவது துறைமுகமாகத் திகழ்ந்தது. சீனாவில் மிகப் பெரிய, மிக நீண்டகால வரலாறு உடைய வணிகத் துறைமுகமாகவும் அது விளங்குகிறது. ஆயிரம் ஆண்டுக்கால வரலாறுடைய வணிக நகரம் என அது போற்றப்படுகிறது. தனிச்சிறப்புமிக்க நிலவியல் மற்றும் வரலாற்று சூழ்நிலையின் காரணமாக, யுயே செங், தூ பாங், மேங் ச்சூ, சி தியன், தா யூ ஆகிய ஐந்து மலைகளின் தென் பகுதியில் உருவாகிய பண்பாட்டின் மையமாகவும் குவாங்சோ மாநகரம் இருக்கிறது.

இப்போது நீங்கள் கேட்டது, Cantonese எனப்படும் மொழியில் வழங்கப்பட்ட கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதி. சீனாவின் வட்டார மொழிகளில் ஒன்றான Cantonese மொழி, Mandarin மொழியிலருந்து வேறுபட்டது. ஆனால் குவாங்சோ மாநகரில், இவ்விரு வகை மொழிகள் உள்ளூர் மக்களால் கூட்டாக பயன்படுத்தப்படுகின்றன. தற்போது முழு உலகிலும் Cantonese மொழியில் பேசுபவரின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது. ச்சுஜியாங் ஆற்று கழிமுகம், ஹாங்காங், மகௌ ஆகிய பிரதேசங்களிலும் வெளிநாடுகளிலும் வாழும் சீனர்களிடையில், Cantonese மொழி மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. Cantonese மொழி ஏற்படுத்திய பெரிய தாக்கத்தில், மேற்கூறிய ஐந்து மலைகளின் தென் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பரவி வரும் குவாங்தோங் இசை நாடகமும் இன்னிசையும், உள்ளூரின் சிறப்பு பண்பாட்டுச் சின்னங்களாக போற்றப்படுகிறது.

ஃபோஷான் நகரில் உருவாகிய குவாங்தோங் நாடகம், குவாங்தோங் மாநிலத்தில் மிக முக்கியமான இசை நாடக வகையாகும். இப்பொழுது அது 300 ஆண்டுகால வரலாறு உடையது. Cantonese மொழியில் பாடப்படும் இந்த இசை நாடகம், சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு முதலில் பரவிய இசை நாடகமாகும். 1852ஆம் ஆண்டு, குவாங்தோங் மாநிலத்தைச் சேர்ந்த ஹோங்ஃபூதாங் இசை நாடகக் குழு வெளிநாட்டில் அரங்கேற்றியதாக அமெரிக்காவின் சன் பிரன்சிஸ்கொ நகரம் செய்தி வெளியிட்டது.

மூத்த கலைஞர் சென் ஷௌமெய் அம்மையார், நடிகை, எழுத்தாளர், இயக்குநர் ஆகிய தகுநிலைகளில் 50 ஆண்டுகளாக குவாங்தோங் இசை நாடகத் துறையில் ஈடுபட்டு வருகிறார். குவாங்சோ மாநகரம், ஆயிரம் ஆண்டுகால வரலாறுடைய துறைமுக நகரம். அதன் திறப்பு தன்மையும் இணக்கமும் குவாங்தோங் இசை நாடகத்தில் ஊடுருவியுள்ளன என்று அவர் கருத்து தெரிவித்தார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040