• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கவர்ந்திழுக்கும் சீனா: குவாங் தோங் மாநிலப் பண்பாடு
  2013-06-27 21:22:46  cri எழுத்தின் அளவு:  A A A   

"சீனாவின் 300க்கும் அதிகமான இசை நாடகங்களில், குவாங்தோங் இசை நாடகத்தின் பாடல் வகைகள் மிக அதிகம். துறைமுக நகரம் என்ற முறையில், திறப்பு மற்றும் இணக்கம், குவாங்தோங் இசை நாடகத்தின் மிகப் பெரிய தனிச்சிறப்பாகும்" என்று சென் ஷௌமெய் அம்மையார் கூறினார்.

குவாங்தோங் இசை நாடகத்தில், வெளிநாட்டு பாடல்களும் வயலின் உள்பட மேலை நாட்டு இசைக் கருவிகளும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. சீன மற்றும் மேலை நாட்டுப் பண்பாட்டின் கலப்பை இது காட்டுகிறது.

குவாங்தோங் இசை நாடகம், பொது மக்களிடையில், குறிப்பாக, Cantonese மொழி பேசும் நடுத்தர வயதினர் மற்றும் முதியோர்களிடையில் மிகவும் வரவேற்கப்படுகிறது. அங்குள்ள மக்கள் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இசை குழு ஒன்றை உருவாக்கி, பூங்கா, சதுக்கம் மற்றும் பொது மக்களின் வீடுகளில், குவாங்தோங் இசை நாடகத்தை அரங்கேற்ற ஒத்திகை செய்து பார்க்கின்றனர்.

குவாங்தோங் இசை நாடகக் கலை, பலவடிவங்களில் வாழையடி வாழையாக வளர்ந்து வருகிறது. இதன் விளைவாக, தனிநபர் இசை நாடகக் குழுக்கள் அதிகமாக காணப்படுகின்றன. குவாங்தோங் இன்னிசை, இந்த நாடக வகையிலிருந்து பிறந்து வளர்ந்து வருகிறது. குவாங்சோ மாநகரின் பெரிய வீதி மற்றும் சிறிய தெருவிலும், பேரங்காடி மற்றும் உணவு விடுதியிலும் உலாவும் போது, குவாங்தோங் இன்னிசையை எப்போதும் கேட்டு மகிழலாம். குவாங்தோங் தனிச்சிறப்புடைய தாளத்துடன் அந்த இசை உங்களுக்கு மனநிம்மதியை வழங்கும்.

குவாங்தோங் இன்னிசை, வட்டார தனிச்சிறப்புமிக்க நாட்டுப்புற இசையாகும். ஒரு காலத்தில், சீனாவில், ஏன் வெளிநாடுகளில் கூட, அது சீனத் தேசிய இசையாக அழைக்கப்பட்டது. குவாங்தோங் இன்னிசை, 1954ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியனின் இசை அமைப்பாளர் ஒருவரால், வெளிப்படையான இசை என கூறப்பட்டது. அதாவது, கண் மூடி இசையைக் கேட்டு மகிழ்ந்தால், இவ்விசை வெளிப்படுத்தும் அம்சமும் காட்சியும் கற்பனையில் காட்சியாகத் தெரியும்.

தொடர்ந்து, குவாங்தோங் மக்கள் பற்றி அதிகமாக அறிந்து கொள்வோம். புள்ளிவிபரங்களின்படி, குவாங்தோங் மாநிலத்தைச் சேர்ந்த சீனர்கள், சுமார் 3 கோடி பேர், உலகில் 160க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். வெளிநாடுகளில் வாழும் சீனர்களின் மொத்த எண்ணிக்கையில், அவர்கள் மூன்றில் இரண்டு பகுதிகளை வகிக்கின்றனர். குவாங்தோங் மாநிலத்தில், வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் முக்கியமாக, ச்சுஜியாங் ஆற்று கழிமுகம், சௌஷான் சமவெளி, மெய்சோ பிரதேசம் ஆகியவற்றில் குழுமி வாழ்கின்றனர். காய்பிங் நகரத்தைச் சேர்ந்த திரு லியாங்கின் பெற்றோரும் தங்கையும், கனடாவிற்குக் குடிபெயர்ந்துள்ளனர். அவர்களது வெளிநாட்டு வாழ்க்கை பற்றி, திரு லியாங் கூறியதாவது—

"சுமார் 100 ஆண்டுகளுக்கு முன், பலர் வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளுக்குச் சென்றனர். தற்போது பலர் முதலீட்டுக்காக வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்து செல்கின்றனர். முன்பு அமெரிக்க கண்ட நாடுகளுக்குச் சென்றவர்கள், சுரங்க அகழ்வு, இருப்புப்பாதை கட்டுமானம் முதலிய துறைகளில் ஈடுபட்டனர். அத்துறைகளுக்குப் பெருவாரியான தொழிலாளர் தேவை" என்று அவர் கூறினார்.

பல ஆண்டுகளின் முயற்கள் மூலம், சீனர்கள் நடத்திய சில்லறை கடைகளும் விற்பனை நிலையங்களும் ஒன்று திரண்டு வணிகத் தெருக்களாக உருவாகி வருகின்றன. வெளிநாடுகளில் வாழும் சீனர்கள் வீட்டேக்கத்தைத் தணிவு செய்யும் இடமாக இந்தத் தெருக்கள் மாறியுள்ளன. இவைகள், தற்போதைய சீனர் வீதி உருவாவதற்கான அடிப்படையாகும்.

வெளிநாடுகளில் வாழும் சீனர்கள் பலர், எப்போதும் தாய்நாட்டில் கவனம் செலுத்துகின்றனர். சொந்த ஊர் கட்டுமானத்திலும் சமூக வளர்ச்சியிலும் அவர்கள் பங்காற்றி வருகின்றனர். 2011ஆம் ஆண்டின் இறுதி வரை, குவாங்தோங் மாநிலம் பயன்படுத்திய அந்நிய முதலீடு மொத்தம் 27 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. அதில் 70 விழுக்காடு தொகை, வெளிநாடுகளில் வாழும் சீனர்களிடமிருந்தும், ஹாங்காங், மகௌ ஆகிய சிறப்பு நிர்வாக பிரதேசங்களிலிருந்தும் வருகிறது. குவாங்தோங் மாநிலத்திலுள்ள அந்நிய முதலீட்டு நிறுவனங்களில் வெளிநாடுகளில் வாழும் சீனர்கள் நடத்தும் நிறுவனங்கள் 60 விழுக்காட்டுக்கு மேலாகும்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040