• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கவர்ந்திழுக்கும் சீனா: ஆன்ஹுய் பண்பாட்டு
  2013-06-27 21:22:33  cri எழுத்தின் அளவு:  A A A   

வணக்கம் அன்பான நேயர்களே, கவர்ந்திழுக்கும் சீனா எனும் பொது அறிவுப் போட்டியின் 5வது கட்டுரை மூலம், மோகனுடன் சேர்ந்து, சீனாவின் ஆன்ஹுய் பண்பாட்டு முக்கியத்தும் வாய்ந்த ஜிசி மாவட்டம் பற்றி அறிந்து கொள்வோம். முதலில், இன்றைய இரண்டு வினாக்களை முன்வைக்கின்றோம்.

1. ஹு திருத்தலத்தின் மொத்த பரப்பளவு எவ்வளவு?

2. லுங்ச்சுவான் கிராமத்தில் மிகவும் பெரும்பாலாக வாழும் கிராமவாசிகளின் குடும்ப பெயர் என்ன?

ஜிசி மாவட்டம் ஆன்ஹுய் மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. பண்டைய ஹுய்சோளவின் 6 முக்கிய மாவட்டங்களில் ஒன்று இதுவாகும். ஹுய்சோள பண்பாடு இங்கு தான் தோன்றியது. ஹுய்சோள பண்பாடு சீனாவின் 3 புகழ்பெற்ற பிரதேச பண்பாடுகளில் ஒன்றாகும். பொருளாதாரம், சமூகம், கல்வி, இலக்கியம், கலை, கைத்தொழில், கட்டிடம், மருத்துவவியல் ஆகியவற்றுடன் இவை தொடர்புடையவை.

ஜிசி மாவட்டத்துக்கு சென்றால், பண்டைய திருத்தலங்கள், குதிரை தலை பதித்த சுவர்கள் முதலிய பாரம்பரிய ஹுய் பிரிவு கட்டிடக்கலை அம்சங்களை பார்த்து, அதன் நீண்டகால வரலாற்றை அனைவரும் உணர்ந்துக் கொள்ளலாம்.

ஜிசி பற்றி பேசுகின்ற போது, உள்ளூர் மக்கள் மிகவும் பெருமிதம் அடைகின்றனர். ஜிசியின் ஈர்ப்பு ஆற்றலை செய்தியாளர்களுக்கு அங்கே பிறந்து வளர்ந்த யாங் ஷுயாங்ஜி விவரித்தார். அவர் கூறியதாவது:

ஹுய்சோள உணவு அதிக மக்களின் கவனத்தை ஈர்கின்றது. ஹுய்சோள உணவு ஜிசி மாவட்டத்தில் தான் உருவாகியது. சீனாவின் பல புகழ்பெற்ற முக்கிய பிரமுகர்கள் இங்கே தான் பிறந்தனர். இதன் ஹுய் பிரிவு கட்டிடக்கலை பரந்த பிரதிநிதித்துவம் வாய்ந்தது. அத்துடன், சீன மை இங்கு தான் உருவாகியது என்று அவர் கூறினார்.

லுங்ச்சுவான் கிராமம் ஜிசியில் பிரதிநிதித்துவம் வாய்ந்த பண்டைய கிராமமாகும். தோரணம், திருத்தலம், கன்னி மடம், சாலை, வீடு ஆகிய அனைத்தும் கோலாகலமான ஹுய்சோள வரலாற்றை கொண்டிருக்கிறன. ஹுய்சோள தேசிய பண்பாட்டு அருங்காட்சியகம் இவைகளாகும். உள்ளூர் வழிகாட்டி ஒருவர் கூறியதாவது:

இது தான் லுங்ச்சுவான் கிராமம். துங்ஜின் வம்சக் காலத்தில் இக்கிராமம் நிறுவப்பட்டது. 400க்கு அதிகமான குடும்பங்கள் இங்கே வாழ்க்கின்றன. மொத்த மக்கள் தொகை 1300ஐ தாண்டியிருக்கிறது. இதில் 90 விழுக்காட்டுக்கு மேலான கிராமவாசிகளின் குடும்ப பெயர் ஹு ஆகும். இன்னொடு குடும்ப பெயர் தீங் ஆகும் என்று அவர் கூறினார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040