• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கவர்ந்திழுக்கும் சீனா: ஆன்ஹுய் பண்பாட்டு
  2013-06-27 21:22:33  cri எழுத்தின் அளவு:  A A A   

காய்கறிகள், பூசணிக்காய், முள்ளங்கி, ஊறுகாய், போன்றவற்றை தா குவோவில் திணிக்கும் பொருட்களாகும். இது நீண்டகால வரலாற்றைக் கொண்டது. பண்டைய ஹுய்சோள மக்கள் மலைப் பிரதேசத்தில் வாழ்க்கை நடத்தி உற்பத்தி பணிகளை மேற்கொண்ட போது, மதிய வேளை அவர்கள் வீட்டுக்கு திரும்பவில்லை. அங்கே தா குவோ தான் முக்கிய உணவு பொருளாக இருந்தது. தவிர, ஹுய்சோள வர்த்தகர்கள் இதர பிரதேசங்களுக்குச் சென்று, வியாபாரம் செய்த போது, தா குவோவை முக்கிய உணவாக பல நாட்கள் வைத்து உண்டு வந்தனர். தற்போது, உள்ளூர் விருந்தகங்கள் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு ஜிசி தா குவோவை வழங்கி வருகின்றன. சுவையான தா குவோவை அவர்கள் சாப்பிடும் போது, ஹுய்சோள பண்பாட்டின் சிறப்பை உணரலாம்.

சரி நேயர்களே, இன்றைய கவர்ந்திழுக்கும் சீனா என்ற சிறப்பு நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. இக்கட்டுரையில் கேட்கப்படும் இரண்டு வினாக்களை மறுபடியும் உங்களுக்கு அறிவிக்கின்றோம்

1. ஹு திருத்தலத்தின் மொத்த பரப்பளவு எவ்வளவு?

2. லுங்ச்சுவான் கிராமத்தில் மிகவும் பெரும்பாலாக வாழும் கிராமவாசிகளின் குடும்ப பெயர் என்ன?


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040