• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கவர்ந்திழுக்கும் சீனா: ஆன்ஹுய் பண்பாட்டு
  2013-06-27 21:22:33  cri எழுத்தின் அளவு:  A A A   

லுங்ச்சுவான் கிராமத்தில் சுமார் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு புகழ்பெற்ற 300 வரலாற்று சின்னங்கள் உள்ளன. தேசிய புதையல் என்று அழைக்கப்படும் ஹு திருத்தலம் இங்கே இருகின்றது. சுங் வம்சக் காலத்தில் இது நிறுவப்பட்டது. மிங் வம்ச நிதி அமைச்சர் ஹுஃபு, இராணுவக் குழிவின் துணைத் தலைவர் ஹுயோங்சியன், சிங் வம்ச அலுவலரும் வர்த்தகருமான ஹு குவான் யோங் ஆகிய புகழ்பெற்ற பிரமுகர்கள் ஆகியோரை நினைவு கூரும் திருத்தலம் இதுவாகும்.

திருத்தலம் பண்டைய ஹுய்சோள குடும்ப அமைப்பு முறையைப் பேணிக்காக்க முக்கிய பங்கூற்றியது. அங்கே, மூதாதையர்களை வணங்குவது, குடும்ப தலைமுறையை ஒப்படைந்து, முழுமைப்படுத்துவது, பிறர் என்ன செய்ய விரும்புகிறோமோ அதனை நாமே நேர்மையோடு பின் பற்றுவது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக புகழ்பெற்ற திருத்தலத்தில் குடும்பத்தின் வம்சாவழி குறிப்புக்கள் உள்ளன. இந்த குடும்ப தலைமுறை எதிர்கால தலைமுறைகளுக்கு சமூகம், குடும்பம், அரசியல் மற்றும் வணிக ஒழுக்க பயிற்சிகளை கற்றுக் கொடுத்துள்ளது.

ஹு திருத்தலம் தெற்கு நோக்கியதாய் வடக்கில் அமைந்துள்ளது. அதன் பரப்பளவு 1564 சதூர மீட்டர். கட்டிடத்தின் முக்கிய கட்டமைப்பு மிங் வம்சம் தனிச்சிறப்பியல்புகள் வாய்ந்தது. உட்புற அலங்காரம் ச்சிங் வம்சம் தனிப்பண்புகளைக் கொண்டது.

வர்த்தகர் பண்பாடு ஹுய் பண்பாட்டு முக்கிய வடிவங்களில் ஒன்றாகும். சுங் வம்ச காலத்தில், ஜிசி வர்த்தகர்கள், சீன மை, தேயிலை, உணவகம், தனிச்சிறப்பியல்பு மிக்க உணவுப் பொருட்கள் ஆகியவற்றை செவ்வனே தொழில் நடத்தி, சீனாவின் எல்லா பகுதிகளுக்கும் சென்றனர் தென்கிழக்காசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு வணிகத்தை பெருக்கினர்.

தவிர, ஹுய்சோள உணவுப் பண்பாடு தனிச்சிறப்பு வாய்ந்தது. சீனாவின் 8 புகழ்பெற்ற உணவுப் வகைகளில் ஒன்று இதுவாகும். ஹுய் வர்த்தகர்கள் சொந்த ஊர் உணவுப் பொருட்களையே விரும்பி வருகின்றனர். ஹுய்சோள மக்கள் வாழ்கின்ற இடங்களில் எல்லாம் ஹுய்சோள உணவுப் பொருட்களும் இருக்கும். ஹுய்சோள மக்கள் சொந்த ஊரோடு வைத்திருக்கும் பற்றை இது முழுமையாக வெளிப்படுத்துகிறது.

தா குவோ ஜிசி புகழ்பெற்ற சிற்றுண்டியாகும். உள்ளூர் பல்வேறு உணவகங்களில் இந்த சிற்றுண்டி கிடைக்கிறது. தாகுவோ எப்படி உருவாக்குவது? உள்ளூர் முதியவர் ஒருவர் கூறியதாவது:

பிசைந்த மாவை வரிவாக்கி அதன் மேல் காய்கறிகளை தூவி, அப்புறம் சுருட்டி எடுத்து, மீண்டும் விரிவாக்கி ரொட்டி போல சமைத்த, ஒரு தா குவோ தயராகிவிடும் என்று அவர் கூறினார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040