• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குவாங் சியில் ச்சுவாங் இன இசை நாடகத்தின் வளர்ச்சி
  2014-05-27 16:16:03  cri எழுத்தின் அளவு:  A A A   

குவாங் சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தியன் லீன் மாவட்டத்தின் நா து கிராமத்தில், சுமார் 200 ஆண்டுகளின் வரலாறுடைய மா கு ஹு என்னும் யாழ் இசைக் கருவி இருக்கிறது. மா கு என்றால், சீனாவில் குதிரை எலும்பு என்று பொருட்படுகிறது. ஹு என்பது இரு நாண் யாழ் இசைக் கருவியைக் குறிக்கிறது. இக்கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக குழுமி வாழும் ச்சுவாங் இன மக்கள், மா கு ஹு உள்ளிட்ட இசைக் கருவிகளின் துணையுடன், நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி, தனிச்சிறப்பு வாய்ந்த ச்சுவாங் இன இசை நாடகத்தை உருவாக்கினர். உள்ளூர் அரசின் ஆதரவுடன், இக்கிராமத்தின் விவசாயிகள், மாவட்ட நகரில் சுவாங் இன இசை நாடக நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

35 வயதான Cen Zhi Deng அம்மையார், நா து கிராமத்தின் ஒரு ச்சுவாங் இன இசை நாடகக் குழுவின் முக்கிய உறுப்பினராக இருக்கிறார். சிறு வயதிலிருந்தே அவர் உள்ளூர் கிராமவாசிகளிடமிருந்து நாட்டுப்புறப் பாடல்களைப் பாடக் கற்றுக்கொண்டார்.

2009ஆம் ஆண்டு வசந்தக்காலம், Cen Zhi Deng அம்மையாரும், ச்சுவாங் இன இசை நாடக் குழுவின் இதர 20க்கும் அதிகமான உறுப்பினர்களும் தியன் லீன் மாவட்ட நகரில் நிகழ்ச்சிகளை அரங்கேற்ற துவங்கினர். அப்போது தியன் லீன் மாவட்டத்தின் மூன்றாவது குவாங் சி சுவான் இன இசை நாடகக் கலை விழா நடைபெற்றது. பல்வேறு வட்டங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த தொழில் முறை சாரா ச்சுவாங் இன இசை நாடகக் குழுக்கள் இக்கலை விழாவில் கலந்து கொண்டன. முன்பு கிராமவாசிகளுக்காக ச்சுவாங் இன இசை நாடகங்களைப் பாடினேன் என்றும், தற்போது மேலும் பெரிய அரங்கில் நிற்பதில் மிகவும் பெருமையடைகிறேன் என்றும் Cen Zhi Deng அம்மையார் தெரிவித்தார்.

அப்போது முதல் Cen Zhi Deng அம்மையார், அரங்கில் ச்சுவாங் இன இசை நாடகங்களை அரங்கேற்றுவதை நேசித்தார். 2010ஆம் ஆண்டு Cen Zhi Deng அம்மையாரும், அவரது கூட்டாளி Lang Mei Zhu அம்மையாரும், "சகோதரிகள் இணைந்து சீ லீன்னைப் பாராட்டுவது" என்ற நாட்டுப்புறப் பாடலுடன், சீ லீன் மாவட்டத்தின் இரண்டாவது பண்பாட்டுக் கலை விழாவின் நாட்டுப்புற பாடல் அரசிகள் என்ற பெருமையைப் பெற்றனர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040