• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குவாங் சியில் ச்சுவாங் இன இசை நாடகத்தின் வளர்ச்சி
  2014-05-27 16:16:03  cri எழுத்தின் அளவு:  A A A   

ச்சுவாங் இன இசை நாடகம், சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றான ச்சுவாங் இன இசை நாடகங்களின் பொது சொல் ஆகும். ச்சுவாங் இன நாட்டுப்புற இலக்கியம், ஆடல் பாடல், கதைப் பாடல் கலை ஆகியவற்றின் அடிப்படையில் இது வளர்ந்து வந்து உருவாகியது. சிங் வம்சத்தின் பேரரசர்கள் துங் ச்சி (Tong zhi)மற்றும் குவாங் ச்சு (Guang Xu)ஆட்சி புரிந்த காலத்தில், மக்கள் ச்சுவாங் இன இசை நாடகங்களை அரங்கேற்றத் தொடங்கினர். பேச்சு வழக்கு, பாட்டு வடிவம், அரங்கேற்றப் பாணி, பிரதேசங்கள் ஆகியவற்றின் வேறுபாடு காரணமாக, பல இசை நாடக வகைகள் தோன்றின. ச்சுவாங் இன இசை நாடக வகைகளில், நான் லு ச்சுவாங் இன இசை நாடகம், பெய் லு ச்சுவாங் இன இசை நாடகம், ச்சுவாங் இன Shi Gong இசை நாடகம், யுன்னான் மாநிலத்தின் ஃபூ நிங் ச்சுவாங் இன இசை நாடகம், குவாங் நான் ச்சுவான் இன இசை நாடகம் ஆகிய பல வகைகள் இப்போது உள்ளன. 2006ஆம் ஆண்டு, சீன அரசவையின் அங்கீகாரத்துடன், ச்சுவாங் இன இசை நாடகம், சீனாவின் முதலாவது தொகுதி பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

சீன இசைக் கல்லூரியின் பேராசிரியர் யாவ் யீ ச்சுன் அண்மையில் தியன் லீன் மாவட்டத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, இம்மாவட்டத்தின் இசை நாடகங்களின் உயிராற்றலைப் பாராட்டினார். உள்ளூர் பண்பாடு, உள்ளூர் பொது மக்களிடையே பரவலாகுவது, தியன் லீ மாவட்ட ச்சுவாங் இன இசை நாடகம் வெற்றிப் பெறுவதற்கு காரணமாகும் என்று அவர் கருத்துத் தெரிவித்தார். சீனாவில் சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த பல இசை நாடகங்கள் நாட்டுப்புற அளவில் தோன்றி, வளர்ந்து வந்துள்ளன. அதற்கு பின், தொழில் முறை கலைஞர்களின் முயற்சியுடன், இந்த இசை நாடகங்கள் வெளியுலகத்திற்கு பரவலாயின. தியன் லீன் மாவட்டத்தில் பொது மக்கள் ச்சுவாங் இன இசை நாடக அரங்கேற்றத்தில் பங்கெடுப்பதை ஊக்குவிப்பது, ச்சுவாங் இன இசை நாடகத்தின் உயிராற்றலை பெரிதும் விரைவுபடுத்தியுள்ளது என்று யாவ் யீ ச்சுன் தெரிவித்தார்.

தற்போது, வட்டாரப் பண்பாட்டு வளர்ச்சி மண்டலத்தை நிறுவுவதன் மூலம், தியன் லீன் மாவட்டத்தின் மாதிரியை வெளிக்கொணர வேண்டும். குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசம் மற்றும் யுன்னான் மாநிலத்தில் ச்சுவாங் இன இசை நாடகப் பண்பாடு வளர்ந்து வரும் பிரதேசங்களை இணைப்பது நல்லது. அப்பிரதேசங்களுக்கிடை ஒன்றுக்கொன்று பரிமாற்றம் மேற்கொள்வதைத் தூண்டி, ச்சுவாங் இன இசை நாடகத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவது பற்றி இசை நாடகத் துறையின் நிபுணர்கள் விவாதித்துள்ளனர் என்று சீனச் சிறுபான்மை தேசிய இன இசை நாடகக் கழகத்தின் தலைவர் லு யாவ் ரு தெரிவித்தார்.


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040