• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் நடனக் கலைஞர் யாங் லீ பிங் அம்மையார்
  2015-02-09 16:01:22  cri எழுத்தின் அளவு:  A A A   

யாங் லீ பிங் அம்மையார், சீனாவின் புகழ் பெற்ற நடன கலைஞர் ஆவார். 1958ஆம் ஆண்டு யுன்னான் மாநிலத்தில் உள்ள Er Yuan என்னும் இடத்தில் அவர் பிறந்தார். பாய் இனத்தை சேர்ந்த அவருக்கு இரண்டு தங்கைகளும், ஒரு தம்பியும் உண்டு. குழந்தை பருவத்தில் யாங் லீ பிங்கின் குடும்பம் வறுமையாக இருந்தபோதிலும், அவரும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் வாழ்ந்த ஊரில், இயற்கைக் காட்சிகள் எழில் மிக்கவை. தெளிந்த ஆற்று நீர் ஓடுகின்றது. மலை சரிவிலும், ஆற்றங்கரையிலும் மக்கள் மாடுகளையும், குதிரைகளையும் மேய்த்தனர். சூரியகாந்தி பூக்கள் எங்கும் காணப்பட்டன. இவ்வாறு அருமையான சூழலில் வாழ்ந்ததால், யாங் லீ பிங்கிற்கு இன்ப சூழ்நிலை உணர்வுகளே உள்ளத்தில் குடி கொண்டிருந்தது.

யாங் லீ பிங் அம்மையார், பாய் இனத்தைச் சேர்ந்தவர். பாய் இனத்தவர்கள், சிறு வயதிலிருந்தே இயற்கைக்கு மதிப்பு அளித்து வளர்கின்றவர்கள். யாங் லீ பிங்கின் ஊரில், பாய் இன மக்களின் வாழ்க்கையில் நடனம் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. நடன கலையின் மூலம், இயற்கை மற்றும் அருமையான வாழ்க்கை மீதான விருப்பம் மற்றும் அன்பை பாய் இன மக்கள் வெளிப்படுத்துவதுண்டு.

சிறு வயதில், யாங் லீ பிங் வயல் வேலையில் தமது தாய்க்கு உதவி செய்தார். உழைப்பு, ஒரு வகை நடனம் என்று தற்போது அவர் கருதுகின்றார். "எடுத்துக்காட்டாக, மிருகத்தைத் துரத்தித்துரத்தி அடிப்பது, வயலில் காய்கறி பயிரிடுவது ஆகிய வாழ்க்கையிலான காட்சிகள், நடனத்தில் வெளிப்படுகின்றன" என்று அவர் கூறினார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040