யுன்னான் மாநிலத்தில் பிறந்தது தமக்கு அதிர்ஷ்டம் தந்ததாக அவர் கருதுகின்றார். அந்த அற்புதமான இடத்தில், பல சிறுபான்மை தேசிய இனங்கள் வாழ்கின்றன. அங்குள்ள பாடல்களும் நடனங்களும் அதிகமாக இருக்கின்றன. மக்கள், அன்பை வெளிப்படுத்தும் விதமாக மயில் நடனத்தை ஆடுகின்றனர். அறுவடையைக் கொண்டாட, பாடல்களை பாடுகின்றனர். சுமார் ஓராண்டுகாலத்தில், யாங் லீ பிங் அம்மையார் யுன்னான் மாநிலத்தில் சோதனைப் பயணம் மேற்கொண்டார். அம்மாநிலத்தில் உள்ள மிக பெரும்பாலான இடங்களுக்கு அவர் சென்றுவிட்டார். யுன்னான் மாநிலத்தில் பயணம் மேற்கொண்ட நாட்களில், ஒரு புறம் இசை நடன கடலில் மூழ்கியதோடு, மறு புறம், ஆழ்ந்த கவலையும் அவருக்கு ஏற்பட்டது. நவீன பண்பாட்டின் பாதிப்பால், அதிக நடனங்களும் பாடல்களும் அழியும் அபாயத்தில் சிக்கிக்கொண்டுள்ளதே அவரது கவலைக்கு காரணமாகும். இந்நிலைமையை தடுக்கும் பொருட்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள எண்ணினார். அரிய சிறுபான்மை தேசிய இன நடனங்களையும் பாடல்களையும் அரங்கேற்ற வடிவத்தின் மூலம் பதிவு செய்யும் வகையில், நிதித்தொகை இல்லாத நிலைமையில், யாங் லீ பிங் தமது சொந்த பணத்தை செலவிட்டு, நடனத்தை படைத்து பயிற்சி செய்தார். பின்னர், "யுன்னான் காட்சிகள்" என்னும் நடன நிகழ்ச்சி உருவாக்கப்பட்டது.
மனித இயல்பு, சிறுபான்மை தேசிய இனத் தனிச்சிறப்பு மற்றும் மனித எழுச்சியை முழுமையாக வெளிப்படுத்தும் இந்த நடனங்களில், நடனமாடுபவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். கிராமங்களில் வாழும் விவசாயிகளை, நடனம் ஆடுபவர்களாக அவர் தேர்வு செய்தார். ஏனெனில், அன்பு மற்றும் உயிருக்காக ஆடும் அவர்கள் மட்டுமே, அந்நடனத்தின் எழுச்சியை மிக நன்றாக வெளிப்படுத்த முடியும் என்று நம்பினார். பார்வையாளர்கள் அந்த நடனத்தைக் கண்டு இரசிப்பதன் மூலம், கலை எழுச்சியையும், உலகமயமாக்க நிலைமையில் தேசிய இனப் பண்பாட்டைக் கையேற்று, வளர்க்கும் வழிமுறையையும் தேட வேண்டும் என்று யாங் லீ பிங் அம்மையார் விருப்பம் தெரிவித்தார்.