• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் நடனக் கலைஞர் யாங் லீ பிங் அம்மையார்
  2015-02-09 16:01:22  cri எழுத்தின் அளவு:  A A A   

சிறு வயதிலிருந்தே அவர் நடனத்தை நேசித்தார். நடனத்தை அவர் பள்ளிகளில் கற்றுக்கொள்ளவில்லை. 1971ஆம் ஆண்டு, யுன்னான் மாநிலத்தின் Xi Shuang Ban Na தெய் இனத் தன்னாட்சி சோவின் இசை நடனக் குழுவில் அவர் சேர்க்கப்பட்டார். 1980ஆம் ஆண்டு சீன மத்திய தேசிய இன இசை நடனக் குழுவில் அவர் சேர்ந்தார். இக்குழுவில் மயில் என்ற நடனத்தை அவரே உருவாக்கி ஆடினார். நடனம் மூலம், மயிலின் அழகை முழுமையாக வெளிப்படுத்த முடியும் என்பது அவரது உறுதியான கருத்து. சிறு வயதில், மயில் இளவரசி பற்றிய அருமையான செவி வழிக் கதையை அவர் கேட்டார். அக்கதையின் படி, எழில் மிக்க ஓர் ஏரியில், தாமரை பூக்களும், மயில்களும் வாழ்கின்றன. "இத்தகைய இடம் எங்கே?" என்று யாங் லீ பிங் தமது இசை நடனக் குழுவின் ஒரு மூத்த உறுப்பினரிடம் கேட்டார். அவர்கள் அத்தகைய இடத்தை நாடி சென்றனர். பின்னர், ஒரு அழகான ஏரியை கண்டுபிடித்தனர். அந்த ஏரிக்கு அருகில், அதிக மயில்கள் காணப்பட்டன. மயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக தோகையை விரித்தாடின. பெருமையோடு ஆடிய மயிலின் அந்த அழகான காட்சிகளைக் கண்டு, மக்கள் வியப்படைந்தனர். தான் கண்டுகளித்த இந்த மயிலின் நடனக் காட்சிகளை கொண்டு மயில் என்ற நடனத்தை யாங் லீ பிங் படைத்தார். பின்னர் நாடளவில் நடைபெற்ற நடனப் போட்டியில் மயில் நடனத்தை ஆடினார். போட்டியில், மயில் நடனம், முதல் பரிசு பெற்றது. அது முதல், மயில் நடனத்தால், யாங் லீ பிங் அம்மையார் சீனாவில் புகழ் பெற்றார். 1988ஆம் ஆண்டு, பெய்சிங் நாளேடு தேர்ந்தெடுத்த சிறந்த பத்து பிரமுகர்களில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989ஆம் ஆண்டு, "யாங் லீ பிங்கின் நடனக் கலை" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. Mao Xiang மற்றும் Dao Mei Lanஐ அடுத்து, யாங் லீ பிங் அம்மையார், "சீனாவின் இரண்டாவது தலைமுறை மயில் நடனமாடுபவராக" அழைக்கப்படுகின்றார். கடந்த பல ஆண்டுகளாக, உலகிலுள்ள பல நாடுகளில் அவர் பயணம் செய்து, கலை பரிமாற்ற நடவடிக்கைகளில் பங்கெடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ரஷியா, அமெரிக்கா, கனடா, தைவான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், அவர் நடன அரங்கேற்றங்களை நடத்தியிருக்கின்றார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040