• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துங் இன மொழி மற்றும் எழுத்துக்களைப் பரவல் செய்யும் முயற்சிகள்
  2015-02-13 09:13:48  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் துங் இன மக்கள், குவெய் சோ மாநிலம், ஹூனான் மாநிலம், குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசம் ஆகியவை இணைக்கப்படும் பகுதியிலும், ஹூபெய் மாநிலத்தின் ஏன் ஷீ து சியா இன மற்றும் மியெள இனத் தன்னாட்சி சோவிலும் வாழ்கின்றனர். தவிர, அவர்களில் பலர் சியாங் சு, குவாங் துங், சே சியாங் ஆகிய மூன்று மாநிலங்களில் வாழ்கின்றனர்.

குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சான் சியாங் துங் இனத் தன்னாட்சி மாவட்டத்தில், துங் இன மக்கள் குழுமி வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் Yan Zhai கிராமத்தின் துங் இன மொழி மற்றும் நாட்டுப்புறப் பாடல் வகுப்பில், கிராமவாசி யாங் லியன் குவாவும், 40க்கு அதிகமான மாணவர்களுடன் இணைந்து, ஆசிரியரிடமிருந்து துங் மொழி பாடத்தைப் படித்து, நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுகின்றார். மேலதிகமாக பயிற்சி மேற்கொண்டால் தான், துங் இன மொழி்யைக் கற்றுக்கொள்வது கடினமாக இல்லை என்று யாங் லியன் குவா தெரிவித்தார். ஒவ்வொரு பயிற்சி வகுப்பும், துங் இனக் கிராமங்களில் பாரம்பரிய பெரிய ரக கூட்டத்தின் இடமான முரசு கட்டிடத்தில் நடைபெறுகின்றது. கலையை நேசிக்கும் நடுத்தரவயதான பெண்கள் இவ்வகுப்பின் மாணவர்களில் அதிகமாக இருக்கின்றனர். அவர்கள் குழந்தைகளுடன் இவ்வகுப்புக்குச் செல்கின்றனர். இவ்வகுப்பில் இளைஞர்கள் குறைவு. முன்பு துங் இன மொழியைப் பேச முடியும். தனக்கு துங் இன மொழியின் எழுத்துக்களைப் படிக்க தெரியாது. தற்போது எழுத்துக்களைக் கற்றுக்கொண்ட பின் துங் இன நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவது, எளிதாக மாறியுள்ளது என்றார் யாங் லியன் குவா. இவ்வகுப்பு முடிந்த பின், தாம் நடத்தும் தங்கும் விடுதிக்கு துங்-ஹான் இரட்டை மொழி கடைப் பெயர் பலகை மற்றும் உணவு வகை பட்டியலைத் தயாரிக்க வேண்டுமென விரும்புவதாகவும், இவ்விடுதி மேலதிக பயணிகளை ஈர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார். 31 வயதான ஷீ ச்சு சுன் (Shi Zu Xun)இக்கிராமவாசிகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கின்றார். எழுத்துக்களின் உச்சரிப்பு உள்ளிட்ட அடிப்படை பாடங்களை அவர் முதலில் கற்றுக்கொடுக்கிறார். ஒரு திங்கள் பயிற்சி வகுப்பு முடிவுக்கு வந்த பிறகு, மாணவர்கள் துங் இன மொழி கட்டுரைகளைப் படிக்க தெரியும். பலர், பாட்டு வரிகளைத் தாமாக எழுத தெரிந்து கொண்டனர். ஷீ ச்சு சுன் சிறு வயதில் துங் இன மொழியில் ஆர்வம் கொண்டார். அவர் அடிக்கடி தனது பெரியப்பாவிடமிருந்தும், கிராமத்தில் இசை நாடகக் கலைஞர்களிடமிருந்தும் துங் இன மொழியைக் கற்றுக்கொள்கின்றார். 2003ஆம் ஆண்டு சான் ஜியாங் மாவட்டத்தில் நடைபெற்ற சிறிய ரக துங் இன மொழிப் பயிற்சி வகுப்பில் அவர் கலந்து கொண்டார். ஓராண்டுக்கு பின் அவர் இம்மாவட்டத்திலுள்ள நாட்டுப்புறப் பாடகர்களுக்கு துங் இன மொழியைக் கற்றுக்கொடுத்தார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040