• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துங் இன மொழி மற்றும் எழுத்துக்களைப் பரவல் செய்யும் முயற்சிகள்
  2015-02-13 09:13:48  cri எழுத்தின் அளவு:  A A A   

துங் இன மொழி எழுத்துக்களின் பயன்பாட்டைப் பரவல் செய்வதில் அதிக பயன் பெறவில்லை. துங் இன கிராமங்களில் துங் இன மொழி எழுத்துக்களை உண்மையாக அறிந்து கொள்ளும் மக்கள் அதிகமாக இல்லை என்று ஷீ ச்சு சுன் தெரிவித்தார். துங் இன மொழி எழுத்துக்களைப் படித்து, எழுத தெரியும் மக்கள் அதிகரித்தால், மேலதிக துங் இன நாட்டுப்புறப் பாடல்கள், எழுத்து வடிவத்தில் கையேற்றப்படு்ம். அடுத்த தலைமுறையினருக்கு அரிய செல்வம் இதுவாகும். கடந்த சில ஆண்டுகளில், சான் ஜியாங் மாவட்டத்தின் சிறுபான்மை தேசிய இன மொழி மற்றும் எழுத்து பணியகம், பயிற்சி, முரசு கட்டிட வகுப்பு, துங் இன மொழி் வகுப்பு ஆகிய பல முறைகள் மூலம், அரசு வாரியங்கள், கிராமங்கள் மற்றும் பள்ளிகளில் துங் இன மொழி பயிற்சிகளை நடத்தியுள்ளது. ஒவ்வொரு பயிற்சியின் காலம், ஒரு திங்களாகும். 2013ஆம் ஆண்டு, சான் ஜியாங் மாவட்டம், 12 வகுப்புகளை நடத்தியது. ஓராயிரத்துக்கு அதிகமானோர் இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டனர்.

சான் ஜியான் மாவட்டத்தின் சிறுபான்மை தேசிய இன மொழி மற்றும் எழுத்து பணியகத்தின் தலைவர் வூ மெய் லியன் பேசுகையில், இவ்வகுப்புகளில், துங் இன மொழி எழுத்துக்களைப் பரவல் செய்யும் அதே வேளையில், துங் இன மொழியில் ஆர்வம் கொண்டுள்ள இளம் மற்றும் நடுத்தர வயதோரைக் கண்டறிந்துள்ளோம் என்று தெரிவித்தார். வாய் மூலம் பரவி வந்துள்ள துங் இனம் இலக்கியப் படைப்புகளைத் தேடி திரட்டுவதில் அவர்கள் பேரார்வம் கொண்டுள்ளனர் என்றும், எதிர்காலத்தில் துங் இனத்துக்குரிய மேலதிக தலைசிறந்த பண்பாட்டை அவர்கள் பதிவு செய்து, இயற்ற முடியும் என நம்புகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது, சான் ஜியாங் மாவட்டம், குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பழம் பெரும் நூல் அலுவலகத்துக்கு ஒத்துழைப்பு நல்கி, துங் இனப் பண்பாட்டு நூல்களைத் தொகுத்துக் கொண்டிருக்கின்றது. "பீபா எனும் துங் இன இசை கருவி" 、 "துங் இன இசை" உள்ளிட்ட மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேறு இரண்டு புத்தகங்கள் வெளியிடப்படும்.


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040