• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துங் இன மொழி மற்றும் எழுத்துக்களைப் பரவல் செய்யும் முயற்சிகள்
  2015-02-13 09:13:48  cri எழுத்தின் அளவு:  A A A   

சான் ஜியாங் மாவட்டத்தின் துங் இன யியலாளர்களில் ஷீ ச்சு சுன் மிகவும் இளமையானவர் ஆவார். அண்மையில் சான் ஜியாங் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட, துங் இனப் பாடல்களையும், கதைகளையும் பதிவு செய்யும் இரண்டு புத்தகங்களை அவர் தான் தொகுத்து, மொழிபெயர்ந்தார். 2002ஆம் ஆண்டு அவர் தேர்வு மூலம், குவாங் சி ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி பாடச் சான்றிதழைப் பெற்றார். இதற்கு பின் அவர் சொந்த ஊருக்குத் திரும்பி, சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்யத் துவங்கினார். கடந்த பல ஆண்டுகளில் வழிகாட்டியாக வேலை செய்யும் அனுபவத்தை பார்த்தால், துங் இனப் பண்பாட்டை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், பண்பாட்டு ஈர்ப்பு ஆற்றல் இல்லாமல் இருந்தால், சான் ஜியாங் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு உயிராற்றல் இல்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார். வரலாற்றில் துங் இன மொழிக்கு எழுத்துக்கள் இல்லை. துங் இன மக்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவதன் மூலம, தேசிய இனப் பண்பாட்டைக் கையேற்றி வருகின்றனர். எழுத்துக்கள் இல்லாததால், பல நாட்டுப்புறப் பாடல்கள் படிப்படியாக இழந்து விட்டன என்று அவர் தெரிவித்தார். நவ சீனா நிறுவப்பட்ட பின், துங் இன யியலாளர்கள், துங் இன மொழியின் உச்சரிப்புக்கிணங்க, லத்தின் எழுத்துக்கள் இடம்பெறும் துங் இன எழுத்துக்களை உருவாக்கினர். 1958ஆம் ஆண்டு, துங் இன எழுத்துக்களின் பயன்பாட்டைப் பரவல் செய்வதை சீன அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040