• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடல் வழிப் பட்டுப்பாதை
  2015-02-26 09:46:16  cri எழுத்தின் அளவு:  A A A   

"கடல் வழிப் பட்டுப்பாதை மற்றும் உலகப் பண்பாட்டு மரபுச் செல்வ விண்ணப்பக் கல்வியியல் கருத்தரங்கு" நவம்பர் 27ஆம் நாள் சீனாவின் தென் கிழக்குப் பகுதியிலுள்ள ஃபு ஜியன் மாநிலத்தின் ச்சுவன் சோ நகரில் நடைபெற்றது. கடல் வழிப் பட்டுப்பாதை, உலக பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் செய்வது, தற்கால ஓட்டம் மற்றும் உலக நாகரீகத்தின் வளர்ச்சிப் போக்கிற்கு பொருந்தியதாக இருக்கிறது என்று அதிகமான நிபுணர்களும் பிரதிநிதிகளும் இக்கருத்தரங்கில் தெரிவித்தனர்.

2011ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள், சீனாவின் பெய்ஹெய், குவாங் சோ, ச்சாங் சோ, ச்சுவன் சோ, நிங் போ, யாங் சோ, பெங் லெய் உள்ளிட்ட 7 நகரங்களின் பிரதிநிதிகள், கடல் வழிப் பாதை, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்வதற்காக விண்ணப்பம் செய்யும் கூட்டு செயல் பணித்திட்டத்தில் கையொப்பமிட்டனர். 2012ஆம் ஆண்டு, ஃபு சோவும், நான் ஜிங்கும் இக்கூட்டு விண்ணப்ப நடவடிக்கையில் பங்கெடுத்தன. மேற்கூறிய ஒன்பது நகரங்கள், உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர கூட்டாக விண்ணப்பம் செய்வது, கடல் வழிப் பட்டுப்பாதையின் நெடுகிலும் உள்ள நகரங்களின் வளர்ச்சியைத் தூண்டி, சீனத் தேசத்தின் பெருமையையும், ஒருங்கிணைப்பு ஆற்றலையும் உயர்த்தும் முக்கிய நடவடிக்கையாகும் என்று ஃபு ஜியன் மாநிலத்தின் பண்பாட்டு அலுவலகத்தின் பணியாளர் சென் ச்சூ நவம்பர் 27ஆம் நாள் ச்சுவன் சோவில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"கடல் வழிப் பட்டுப்பாதையின் நெடுகிலும் உள்ள ஒன்பது நகரங்களிடையேயான பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கடல் வழிப் பட்டுப்பாதை, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்வதற்கான விண்ணப்பத்தின் போக்கினை விரைவாக முன்னேற்றுவது, பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21வது நூற்றாண்டின் கடல் வழிப் பட்டுப்பாதை உருவாக்கம் பற்றிய தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகும்" என்றார் அவர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040