பண்டை கடல் வழிப்பட்டுப் பாதையின் துவக்க புள்ளியான ச்சுவன் சோ, தன் பழமை வாய்ந்த பண்பாடு மூலம், சீனத் தேசத்தின் ஆழ்ந்த நாகரீகத்தையும், சீன-அரபு நாட்டு பாரம்பரிய நட்புறவையும் நேரடியாக கண்டுள்ளது. சீன-அரபு நாட்டுப் பொருளாதார மற்றும் பண்பாட்டுத் தொடர்பை வலுப்படுத்துவதில் இந்நகர் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன், அரபு மக்கள் சிலர், கடல் மற்றும் தரை பட்டுப்பாதையின் வழியாக, ச்சுவன் சோவுக்கு வந்தடைந்தனர். அவர்கள் இஸ்லாமிய பண்பாட்டுக் கலையை ச்சுவன் சோவுக்கு கொண்டு வந்தனர். வரலாற்றுப் போக்கில், ச்சுவன் சோவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது வரை, அரபு வம்சாவழியைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் இன்னமும் ச்சுவான் சோவில் வாழ்கின்றனர்.
புதிய காலக் கட்டத்தில், பட்டுப்பாதைக்கு, ஒற்றுமை, சமத்துவம், ஒன்றுக்கொன்று நம்பிக்கையும் நன்மையும் தருவது, சகிப்பு, ஒத்துழைப்பு, கூட்டாக அனுபவங்களை பரிமாறிக் கொண்டு, வெற்றி பெறுவது என்ற உள்ளடக்கம் வழங்கப்பட்டுள்ளது. பண்டை கடல் வழிப் பட்டுப்பாதையின் துவக்கப் புள்ளியாகவும், 21வது நூற்றாண்டின் கடல் வழிப் பட்டுப் பாதையிலுள்ள முக்கிய நகரமாகவும், ச்சுவன் சோ பலதரப்பட்ட பண்பாட்டுப் பரிமாற்றத்தை விரிவாக்க பாடுபட வேண்டும் என்றும், இந்நகர் பண்பாட்டு வழிகாட்டல், பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு, ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு, நன்மை தருவதை முக்கிய நெறியாக கொண்டு, 21வது நூற்றாண்டு கடல் வழிப் பாதையின் முக்கிய வட்டாரத்தை ஆக்கப்பூர்வமாக கட்டியமைக்க வேண்டும் என்றும் ச்சுவன் சோ நகராட்சி அரசு முன்வைத்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ச்சுவன் சோ நகராட்சிக் குழுவின் நிரந்தர உறுப்பினரும், துணை செயலாளருமான ச்சோ யீன் ஃபாங் கூறியதாவது:
"வரலாற்றுப் போக்கில், வேறுபட்ட பிரதேசங்களில், வேறுபட்ட மொழிகள் மற்றும் நம்பிக்கைகளைக் கொண்டுள்ள, வேறுபட்ட தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள், பட்டுப்பாதை மூலம் தொடர்பு கொண்டு, ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, இன்னல்களை சமாளித்து, நட்புப்பாலத்தை உருவாக்கினர். தற்காலத்தில், பட்டுப்பாதை மக்களை மீண்டும் நெருக்கமாக இணைத்துள்ளது. 21வது நூற்றாண்டு கடல் வழி பட்டுப்பாதை, மேலதிக சகிப்பு தன்மை, இணக்கம், செழுமை, வளர்ச்சி ஆகியவை படைத்த பாதையாக மாறும் என்றும், உலகின் எதிர்காலம் மேலும் அருமையாக மாறும் என்றும் நம்புகிறோம்" என்றார் அவர்.