• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடல் வழிப் பட்டுப்பாதை
  2015-02-26 09:46:16  cri எழுத்தின் அளவு:  A A A   

சர்வதேச வரலாற்று நினைவுச் சின்ன ஆளுநர் குழுவின் துணை தலைவர் குவோ, சீனாவின் கன்சு மாநிலத்தின் மைய் சி மலை இவ்வாண்டு ஜூன் திங்கள் இறுதியில் உலக மரபுச் செல்வப் பட்டியலில் வெற்றிகரமாக சேர்க்கப்படுவதை எடுத்துக்காட்டாக கொண்டு, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் வெற்றிகரமாக சேர்வது, தொடர்புடைய பிரதேசச் சுற்றுலா துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று வலியுறுத்தினார். அவர் கூறியதாவது:

"கன்சு மாநிலத்தின் மைய் சி மலை, உலக பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின், இவ்வாண்டு ஜூலை திங்கள் முதல் இது வரை, மைய் சி மலையில் பயணம் மேற்கொண்டோரின் எண்ணிக்கை, 30 விழுக்காடு அதிகரித்து, சுமார் 5 லட்சத்தை எட்டியுள்ளது. அக்டோபர் திங்கள் துவக்கத்தில் சீன தேசிய விழா விடுமுறை நாட்களில், பயணிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு மிக அதிகமாக 19 ஆயிரத்தை எட்டியுள்ளது" என்றார் அவர்.

கடல் வழிப் பட்டுப் பாதை, சீனாவையும், இப்பாதையின் நெடுகிலுள்ள பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது. கடந்த ஆயிரம் ஆண்டுகளில், பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கும் நாகரீக முன்னேற்றத்துக்கும் இப்பாதை இணையற்ற பங்காற்றியுள்ளது என்று சீனாவிலுள்ள யூனேஸ்கோவின் தேசியக் குழுவின் அறிவியல் மற்றும் பண்பாட்டுப் பிரிவின் தலைவர் சென் ரெங் அம்மையார் கருத்து தெரிவித்தார். பண்டை கடல் வழிப் பட்டுப்பாதையும் சரி, தற்போது சீனா முன்வைத்த 21வது நூற்றாண்டின் கடல் வழிப் பட்டுப்பாதையின் உருவாக்கம் பற்றிய முன்மொழிவும் சரி, அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டாக வெற்றி பெறுவது என்ற கால ஓட்டத்துக்கு ஏற்றதாக இருக்கிறது. இது உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு மற்றும் கையேற்றலைத் தூண்டுவது பற்றிய யுனேஸ்கோவின் கருத்துக்கு ஏற்றதாக இருக்கிறது என்று சென் ரெங் அம்மையார் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"கடல் வழிப் பட்டுப்பாதை, இப்பாதையின் நெடுகிலுள்ள பல்வேறு நாடுகளுக்கும் நன்மை தரும் அமைதி மற்றும் பண்பாட்டுப் பாதையாகும். கீழை மற்றும் மேலை நாடுகளின் பல்வேறு தேசிய இனங்களின் புத்தாக்க எழுச்சியை இது ஒன்றிணைத்துள்ளது. முந்தையக் காலத்தில், எண்ணற்ற வணிகர்கள், தூதர்கள், துறவிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், சீனாவிலிருந்து புறப்பட்டு, கடல் மற்றும் காற்று பயணத்தின் மூலம், கடல் வழிப் பட்டுப்பாதையை ஆராய்ந்து கண்டறிந்தனர். இப்பாதை மூலம், கீழை நாடுகள் மற்றும் மேலை நாடுகளின் மக்கள், ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு, சமத்துவ முறையில் வர்த்தகம் செய்தனர். இப்பாதை மூலம், கீழை நாடுகளுக்கும் மற்றும் மேலை நாடுகளுக்கும் பரிமாற்றம் மேற்கொண்டனர். பல்வேறு நாடுகளும் பல்வேறு தேசிய இனங்களும் ஒன்றுக்கொன்று புரிந்து கொண்டு, கருத்து வேற்றுமைகளை நீக்கின. யுனேஸ்கோ அமைப்பின் கருத்துக்கும், அமைதி மற்றும் வளர்ச்சி என்ற கால ஓட்டத்துக்கும் இது பொருந்தியதாக இருக்கிறது" என்றார் அவர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040