• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அழகான சீனா-2015 பட்டுப்பாதை சுற்றுலா ஆண்டு
  2015-04-02 09:41:27  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் தேசிய சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டுடன், அழகான சீனா-2015ஆம் ஆண்டு பட்டுப்பாதை சுற்றுலா ஆண்டு என்ற நடவடிக்கையின் துவக்க விழா ஜனவரி 8ஆம் நாள் ஷென்சி மாநிலத்தின் சி அன் நகரில் துவங்கியது. "பட்டுப்பாதையில் பயணம் மேற்கொண்டு, அழகான சீனாவை மகிழ்ந்து அனுபவிப்பது" "புதிய பட்டுப்பாதை, புதிய சுற்றுலா, புதிய அனுபவம்" ஆகியவை, இந்நடவடிக்கையின் முழக்கங்கள் ஆகும். மூன்று ஆண்டுகள் நீடிக்கும் பட்டுப்பாதைப் பொருளாதார மண்டலம் மற்றும் 21வது நூற்றாண்டு கடல் வழிப் பட்டுப்பாதை சுற்றுலா பரப்புரை திட்டத்தை சீனத் தேசிய சுற்றுலா பணியகம் வகுத்துள்ளது. தரை மற்றும் கடல் வழிப் பட்டுப்பாதையின் நெடுகிலுள்ள வட மேற்கு, வட கிழக்கு மற்றும் தென் மேற்கு பிரதேசங்களிலும், கடலோரப் பிரதேசத்திலும், ஹாங்காங், மக்கெள, தைவான், சீனப் பெருநில பகுதி ஆகிய பிரதேசங்களிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.

குவென் ச்சுங் சமவெளியின் மத்தியப் பகுதியிலுள்ள சி அன் நகர், ஒரு பழமை வாய்ந்த நகரமாகும். சி அன் சீன வரலாற்றில் 12 வம்சங்களின் தலைநகராகவும், பண்டையப் பட்டுப்பாதையின் துவக்கப் புள்ளியாகவும் இருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய ஹான் வம்சக்காலத்தில் இருந்த பட்டுப்பாதையில், சீனா, இப்பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் பாதையாகும். பட்டுப்பாதை, சீனாவில் மிக பழமை வாய்ந்த, பிரதிநிதித்துவம் வாய்ந்த சுற்றுலா சின்னங்களில் ஒன்றாகும். சீனாவில் பட்டுப்பாதையின் நெடுகிலுள்ள பிரதேசங்களின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியைத் தூண்டுவது, பட்டுப்பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுடன் சுற்றுலா ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு முக்கிய வழிமுறையாகும் என்று சீனத் தேசிய சுற்றுலா பணியகத்தின் துணை தலைவர் து சியாங் "அழகான சீனா, பட்டுப்பாதை சுற்றுலா ஆண்டு" என்ற நடவடிக்கையின் துவக்க விழாவில் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"பட்டுப்பாதை சுற்றுலாவை வளர்ப்பது, சுற்றுலா வளத்தை ஒருங்கிணைத்து, இப்பாதையின் நெடுகிலுள்ள மாநிலங்கள் சுற்றுலா ஒத்துழைப்பை மேற்கொண்டு, வட்டார சுற்றுலா கூட்டணியை உருவாக்குவதற்கு துணை புரியும். பட்டுப்பாதையை சங்கிலியாக கொண்டு, சீனாவுக்கும், தென் கிழக்கு ஆசியா, தெற்காசியா, மத்திய ஆசியா, வட கிழக்கு ஆசியா, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குமிடை வட்டார சுற்றுலா பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேலும் தூண்டி, பன்முக சுற்றுலா ஒத்துழைப்பு பரிமாற்ற அமைப்பு முறையை உருவாக்கி, ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ள சுற்றுலா போக்குவரத்து, தகவல் மற்றும் சேவை வலைப்பின்னலை உருவாக்கலாம்" என்றார் அவர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040