• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அழகான சீனா-2015 பட்டுப்பாதை சுற்றுலா ஆண்டு
  2015-04-02 09:41:27  cri எழுத்தின் அளவு:  A A A   

இரண்டு ஆண்டுகளுக்கு முன், "பட்டுப்பாதை பொருளாதார மண்டலத்தை" உருவாக்குவது பற்றிய கருத்தை சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் முன்வைத்தார். இது வரை, சீனாவின் 27 மாநிலங்கள், பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21வது நூற்றாண்டு கடல் வழிப் பட்டுப்பாதையின் ஆக்கப்பணியில் பங்கெடுத்து, முக்கிய பங்காற்றும் என்று தெரிவித்துள்ளன. பட்டுப்பாதை சுற்றுலா ஆண்டு என்ற நடவடிக்கையின் வாய்ப்பைக் கொண்டு, தங்களது சுற்றுலா தனிச்சிறப்புகளை வளர்க்க வேண்டும் என்று சீனாவின் சில மாநிலங்களின் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஷென் சி மாநிலத்தின் துணை தலைவர் பெய் அ யிங் கூறியதாவது:

"ஷென் சி மாநிலம், பட்டுப்பாதையின் நடையுடை பாவனைகளை அனுபவிக்கும் சுற்றுலா இடைவழியை பெரிதும் கட்டியமைத்துக் கொண்டிருக்கின்றது. சில பட்டுப்பாதை பண்பாட்டுச் சுற்றுலா திட்டப்பணிகள் விரைவாக முன்னேறி வருகின்றன. ஷென் சி சுற்றுலா துறைக்கான முதலீட்டு நிதி கடந்த ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. இந்நிதியின் முதல் கட்ட நிதித்தொகையாக, 500 கோடி யுவான் திரட்டப்பட்டுள்ளது. பட்டுப்பாதை சுற்றுலா ஆண்டு என்ற நடவடிக்கையை வாய்ப்பாகக் கொண்டு, ஷென் சி மாநிலம் இதர மாநிலங்களுடன் கையோடு கைகோர்த்து ஒத்துழைக்கும். பட்டு்ப்பாதையின் நெடுகிலுள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களுடனான பண்பாடு மற்றும் சுற்றுலா பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேலும் விரிவாக்கி, பட்டுப்பாதை, உலகில் சுற்றுலா பண்பாட்டு சின்னங்களின் புகழை இடைவிடாமல் உயர்த்தும்" என்றார் அவர்.

பட்டுப்பாதையின் நெடுகிலுள்ள பிரதேசங்கள், வேறுபட்ட சுற்றுலா தனிச்சிறப்புகளைக் கொண்டுள்ளன. சுற்றுலா துறையின் ஒத்துழைப்பில் இப்பிரதேசங்களுக்கிடையே அதிக உள்ளார்ந்த ஆற்றல் உண்டு என்று சீன சமூக அறிவியல் கழகத்தின் சுற்றுலா ஆய்வு மையத்தின் தலைவர் சுங் ரெய் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"பட்டுப்பாதையின் நெடுகிலுள்ள பிரதேசங்கள், பண்பாட்டுத் தனிச்சிறப்புகளில் வேறுபட்டவை. எடுத்துக்காட்டாக, ஷென் சி, கன்சு, சின்ச்சியாங், பட்டுப்பாதையின் தலைப்பி்ன் கீழ், தன் பிரதேசத்தின் தனிச்சிறப்புக்கிணங்க, ஒருமைப்பாட்டுடைய சின்னத்தை உருவாக்கலாம். இச்சின்னத்தின் பரவலில் அதிகப் பணிகள் மேற்கொள்ளப்படும்"என்றார் அவர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040