• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தாள் கத்தரிப்பு கலைஞர் ச்சாங் யு சியன்
  2015-04-13 15:43:59  cri எழுத்தின் அளவு:  A A A   

ச்சாங் யு சியன் அம்மையாருக்கு 80 வயது. யுன்னான் மாநிலத்தின் தலைநகரான குன் மீங் நகரில் அவர் வாழ்த்து வருகின்றார்.

ச்சாங் யு சியன் அம்மையாரின் வீடு, தூய்மையாகவும், நேர்த்தியாகவும் இருக்கிறது. வீட்டின் அறையில், தத்ரூமான பல்வேறு படைப்புகள் காணப்படுகின்றன. அதில் சிறப்பு மிக்க தாள் கத்தரிப்பு படைப்புகள் தான் அதிகம். சீனாவின் நாட்டுப்புற கதைகளில் வழங்கப்படும் நிலாவில் தங்கியிருக்கும் தேவதை சாங் எ, வயலில் உழைக்கின்ற தம்பதியினர், அழகான மங்கை, அன்பான குழந்தை முதலிய உருவங்கள் இப்படைப்புகளில் அடங்கியுள்ளன.

சிறு வயது முதலே, தமது தந்தையின் செல்வாக்கினால் தாள் கத்தரிப்பை நேசிக்கும் குணம் ஏற்பட்டது என்று ச்சாங் யு சியன் அம்மையார் கூறினார். படங்களை வரைவதில் அவர் தேர்ச்சி பெற்றவர். விழாக்களி்ன் போது, மலர், பறவை, வண்டி, குதிரை உள்ளிட்ட பல்வேறு உருவங்களை என் தந்தையார் தாளில் வரைந்து, அவற்றைக் கத்தரிப்பு செய்தார் என்றும் அவர் கூறினார்.

சிறு வயதில், ச்சாங் யு சியன் அம்மையார் தாள் கத்தரிப்பு மீது பேரார்வம் கொண்டிருந்த போதிலும், அவர் கடினமான வாழ்க்கையின் அறைகூவலை எதிர்நோக்க வேண்டியிருந்தது. ச்சாங் யு சியன் அம்மையார் பத்து வயது சிறுமியாக இருந்த அவருடைய பெற்றோர்கள் இறந்து விட்டனர். எனவே, குடும்பத்தின் முழு ச்சுமையையும் ஏற்க வேண்டியிருந்தது. தமக்கும் இரு தங்கைகளுக்காகவும் உழைத்து பணம் ஈட்டும் பொருட்டு, மற்றவரிடமிருந்து பூத்தையல் வேலை, காலணி தயாரிப்பு ஆகிய நுட்பங்களை அவர் கற்றுக்கொண்டார். அதன் பின், சந்தைக்குச் செல்லும் போதெல்லாம், மக்களுக்கு தேவைப்படும் பல்வகை உருவங்களை அவர் தாளில் கத்தரிப்பு செய்து விற்க தொடங்கினார். ச்சாங் யு சியனும் அவரது தங்கைகளும் இத்தகைய வாழ்க்கையில் படிப்படியாக வளர்ந்தனர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040