• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தாள் கத்தரிப்பு கலைஞர் ச்சாங் யு சியன்
  2015-04-13 15:43:59  cri எழுத்தின் அளவு:  A A A   

ச்சாங் யு சியன் அம்மையாரின் தாள் கத்தரிப்பு படைப்புகள், பல்லாயிரக்கணக்கில் இடம்பெறுகின்றன. இப்படைப்புகள், தத்ரூமானவை. இது, சாதாரண நாட்களில், அவர் ஒரு பொருளை உற்று நோக்குதலுடன் தொடர்புடையது. ஒரு முறை, சிங் போ இனம் பற்றிய படைப்பை அவர் தாளில் கத்தரிக்க எண்ணினார். ஆனால் சிங் போ இன மங்கையின் ஆடையில் அணியும் வெள்ளி அலங்காரத்தை அவரால் அலங்காரமாய் கத்தரிக்க முடியவில்லை. எனவே அவர் நாள்தோறும் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்று, சிங் போ இன மங்கையரின் பாவாடை பூ வேலைப்பாடுகள் மற்றும் வெள்ளை அலங்காரப் பொருட்களை உற்று நோக்கி கவனித்தார். இறுதியில், "காதலருக்கு மங்கை மது கொடுத்து விருந்தளிப்பது" என்ற தாள் கத்தரிப்பை படைத்தார். அப்படைப்பு, நாடளவிலான உயரிய பரிசை பெற்றது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, தாள் கத்தரிப்புத் துறையில் ச்சாங் யு சியன் அம்மையார் புகழ் பெற்றுள்ளார். ஆனால், அவரைப் பொறுத்த வரை, தாள் கத்தரிப்பு அளிக்கும் அமைதியான வாழ்க்கையையே தனக்கான மிக நல்ல ஊட்டசத்தாக கருதுகின்றார்.

ச்சாங் யு சியன் அம்மையார் செய்தியாளருக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது, ஒரு குழந்தையின் பெற்றோர் வந்தனர். தமது 8 வயதான மகள், ச்சாங் யு சியன் அம்மையாரிடமிருந்து தாள் கத்தரிப்பு நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். அவர் கூறியதாவது:

"தாள் கத்தரிப்பு, நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றாகும். அது மிகவும் அரியது. இந்த கலை அழிந்தால், அது மிகவும் வருத்தத்தக்கது. இந்த கலையைக் கற்றுக் கொள்வதன் மூலம் ஒரு புறம், தேசிய இனப் பண்பாட்டைக் கையேறலாம். மறு புறம், குழந்தைகளின் அறிவுத்திறமையையும் உயர்த்தலாம்" என்றார், அவர்.


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040