• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிங்கியாங்கைச் சேர்ந்த உச்சதொனிப் பாடகி தில்பெர் யூனுஸ் அம்மையார்
  2015-05-08 16:02:21  cri எழுத்தின் அளவு:  A A A   

தில்பெர் யூனுஸ் அம்மையார் "சீனாவின் வானம்பாடி" என்று அழைக்கப்படுகின்றார். அவர் சர்வதேச அரங்கில் காலூன்றி நின்று, குரலை வசப்படுத்தி பாடும் திறனால் புகழ் பெற்றவர்களை குறிக்கும் coloratura என்ற பெருமையுடன் உலகில் பொதுவாக பாராட்டப்படுகின்றார். உற்சாகம் நிறைந்த அவரது பாட்டொலி, ரசிகர்களை மனமுருக வைக்கிறது.

சுமார் 50 வயதான தில்பெர் யூனுஸ் அம்மையார், சிங்கியாங்கின் காஷ் நகரில் பிறந்தார். அவர் உய்கூர் இனத்தைச் சேர்ந்தவர். 1987ஆம் ஆண்டு சீன மத்திய இசைக் கல்லூரியிலிருந்து அவர் முதுகலைப் பட்டம் பெற்றார். 1988ஆம் ஆண்டு, அழைப்பின் பேரில், பின்லாந்து தேசிய இசை நாடக அரங்கத்துக்குச் சென்று, தனிப் பாடகியாக பொறுப்பேற்றார். அப்போது முதல், அவர் ஐரோப்பிய இசை நாடக அரங்கில் முத்திரை பதிக்கத் துவங்கினார். சில பத்து நாடுகளில் சில நூறு தனிப்பாடல் இசை விருந்துகளை நடத்தி, சில பத்து இசை நாடகங்களில் கதாப் பாத்திரமாக நடித்து, பல புகழ் பெற்ற இசை நடத்துனர்கள் மற்றும் இசைக் கோர்வை குழுக்களுடன் அவர் ஒத்துழைப்பு மேற்கொண்டிருக்கிறார். 1997, 1998ஆம் ஆண்டுகளில், ஸ்வீடனின் தலைசிறந்த இசை நாடக நடிகர் விருதான Brigit Nilsson விருதை அவர் பெற்றார். தமது ஆசிரியர் யார் என்று வெளிநாட்டு இசை நாடகக்கலைஞர்கள் கேட்ட போதெல்லாம், சீனாவில் சிறந்த இசைக் கல்வியை தாம் பெற்றதாக தில்பெர் யூனுஸ் அம்மையார் எப்போதும் பதிலளித்தார். அவர் கூறியதாவது:

"இசைக் கல்லூரியில், மொழி, இசை ஆகியவற்றில், எங்கள் ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்புடனும், பன்முகங்களிலும் எங்களுக்கு பாடங்களைக் கற்றுக்கொடுத்தனர். எங்களுக்கு சிறந்த பாடல் திறன் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் பாராட்டப்படுகின்றோம். வெளிநாடுகளில் அனைத்து இசை நாடகங்களையும் பாடக் கற்றுக்கொண்ட போதிலும், முன்பு அதிக பயிற்சிகளைப் பெற்றிருந்தேன். ஆதலால், சாதனைகளை படிப்படியாக பெற்றுள்ளேன" என்றார் தில்பெர் யூனுஸ்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040