சர்வதேச அரங்கில் ஒளிவீசும் சாதனைகளைப் பெற்றுள்ள சில சீன coloraturaகளில் ஒருவராக தில்பெர் யூனுஸ் அம்மையார் திகழ்கின்றார். தற்போது ஸ்வீடன் தேசிய இசை நாடக அரங்கத்தில் முக்கிய கலைஞராக அவர் பொறுப்பு வகிக்கிறார். அவர் உலக இசை நாடக அரங்குகளில் பல சிறந்த கதாப் பாத்திரங்களை ஏற்றுள்ளார். எடுத்துக்காட்டாக, "favourite courtier" என்ற நாடகத்தில் Gilda என்ற கதாப் பாத்திரம். கலை ரீதியில், அவர் ஒரு கோட்பாட்டைக் கடைப்பிடிக்கின்றார். அதாவது தமக்கு பொருத்தமற்ற கதாப் பாத்திரங்களில் அவர் நடிப்பதில்லை.
இசை நாடக வல்லுநர்கள் அதிகமாக இருக்கும் ஐரோப்பிய இசை நாடக அரங்கில், coloraturaவாக தில்பெர் யூனுஸ் அம்மையாரின் தகுநிலை சந்தேகப்பட முடியாது ஆகும். அரங்கில் அவர் எப்போதும் பாராட்டு மலர்களையும் கரவொலியையும் பெறுகிறார். ஆனால், இதற்காக எவ்வளவு முயற்சி செய்துள்ளார் என்பதை அவருக்கு மட்டுமே தெரி்ந்த உண்மையாகும். வெளிநாட்டுக்குச் சென்ற துவக்கத்தில், அவர் அன்னிய மொழியில் பேசவும், இயக்குநர் கூறியதைப் புரிந்து கொள்ளவும் முடியாது. தில்பெர் யூனுஸ் அம்மையார் நினைவுபடுத்தி கூறியதாவது:
"அகராதி ஒன்றை எடுத்துச் சென்றேன். இசை நாடக அரங்கேற்றம் முடிவுக்கு வந்த பின், கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. மக்கள் மது அருந்தி, ஓய்வாக இருந்தனர். ஆனால், அந்த இரவுகளில் நான் மிகவும் களைப்பாக இருந்தேன். வகுப்பில் கல்வி பயில்வதைப் போல், அவர்கள் பேசியதைக் கேட்டு, மிகவும் சோர்ந்து போனேன்" என்றார் தில்பெர் யூனுஸ் அம்மையார்.