• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:உருளைக்கிழங்கு சாலாட்
  2015-05-13 18:56:51  cri எழுத்தின் அளவு:  A A A   

சக்திவேல்....... சரி, போகலாம். முதலில், முட்டையின் மஞ்சள் கரு சாற்றைத் தயாரிக்க வேண்டும்.

ஜெயா....... முட்டையின் மேல் மற்றும் கீழ் முனைகள் முறையே ஒரு துளையைச் செய்து, முட்டையின் வெள்ளை கருவையும் மஞ்சள் கருவையும் பிரியுங்கள்.

சக்திவேல்.......பின்னர், மஞ்சள் கருவில், புளிப்பு சாற்றையும், கொஞ்சம் எண்ணெயையும் ஊற்றுங்கள். சாற்றை நன்றாக கலக்குங்கள்.

ஜெயா.......அடுத்து, உருளைக்கிழங்கைத் துண்டுகளாக வெட்டி, வாணலியில் அவியுங்கள்.

சக்திவேல்....... உருளைக்கிழங்கை அவிக்கும் காலத்தில், வெங்காயம், கேரட் ஆகியவற்றை துண்டு துண்டாக வெட்டி, வாணலியில் மிதமான வதக்குங்கள்.

ஜெயா....... வதக்கும் போது, தேவையான உப்பு மற்றும் மிளகுத் தூளைப் போடுங்கள்.

சக்திவேல்....... அதே வேளையில், வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்ட வேண்டும். ஆனால், வதக்கத் தேவையில்லை.

ஜெயா....... ஆமாம், இப்போது, அவித்த உருளைக்கிழங்கை குளிர விடுங்கள்.

சக்திவேல்....... முன்பு வெளியே பிரித்த முட்டையின் வெள்ளைக் கருவையும், அவித்து, குளிர்ச்சியாக விடுங்கள். துண்டுகளாக வெட்டுங்கள்.

ஜெயா....... சரி, ஆயத்த பணி முடிகிறது. இனி, சமைக்கப் போகலாமா.

சக்திவேல்....... தாராளமாக. இப்போது, முன்பு தயாரித்த கலப்புச் சாற்றையும், முட்டையின் மஞ்சள் கரு சாற்றையும், அவித்த உருளைக்கிழங்குத் துண்டுகளை வைக்கும் கிண்ணத்தில் ஊற்றி, கலக்குங்கள்.

ஜெயா.......ஆமாம், வெள்ளரிக்காய் துண்டுகள், அவித்த முட்டையின் வெள்ளைக் கரு, வதக்கும் வெங்காயம் மற்றும் கேரட்டை, கிண்ணத்தில் வைத்து, கலக்குங்கள்.

சக்திவேல்.......சரி, இப்போது, உருளைக்கிழங்கு சாலாட் தயார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040