• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எலுன்ச்சுன் இனத்தின் பாரம்பரிய பண்பாடு
  2015-06-18 17:03:41  cri எழுத்தின் அளவு:  A A A   

இப்போது அஜிலங்கிற்கு வயது ஆகி விட்டது. கண் பார்வையிலும் சிக்கல் ஏற்பட்டது. கைகளும் நடுங்கத் துவங்கி விட்டன. இந்த கைவினை நுட்பத்தைக் கைவிடாமலிருப்பதற்குக் காரணம் என்ன? பூர்ச்ச மரப்பட்டைக் கைவினைப் பொருட்களாகத் தயாரிப்பது, தமக்கு ஒரு தீராத வழக்கமாக மாறியுள்ளது என்று அஜிலங் கூறினார்.

50 ஆண்டுகளுக்கு முன் பெரிய மலைகளில் வசிக்கும் எலுன்ச்சுன் இன மக்கள் தொடக்கக்கால சமுதாயத்தில் இருந்தனர். அவர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை வசதிகள் மிகவும் பின்தங்கியவை. கடந்த சில ஆண்டுகளில் எலுன்ச்சுன் இனத்தவர்கள் வாழும் இடங்களில் பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து வருவதுடன், அவர்களின் வாழ்க்கையும் நவீனமயமாகியுள்ளது. மலைகளில் இருப்பது போல், உற்பத்தி மற்றும் வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை. எனவே, பூர்ச்ச மரப்பட்டைக் கொண்டு கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் வாய்ப்பும் மென்மேலும் குறைந்து வருகின்றது என்பது இயல்பானதேயாகும். இக்கைவினை நுட்பத்தை கற்றுத் தேர்ந்தவர்களின் எண்ணிக்கை மென்மேலும் குறைந்து வருவதைக் கண்டு முதியோர் அஜிலங் கவலைப்பட்டுள்ளார். எனவே, இந்நுட்பத்தைக் கைவிடக் கூடாது என அவர் உறுதி பூண்டார். நேரத்தைப் பயன்படுத்தி கிராமத்திலுள்ள இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று, அஜிலங் தம்மை தாமே நிர்பந்தித்துக் கொண்டார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040