• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உஸ்பெக் இன பாடகர் சமிலி சக்ர்
  2015-07-03 16:36:14  cri எழுத்தின் அளவு:  A A A   

பாடல் தவிர, பொது நலப் பணிகளிலும் சமிலி ஆர்வம் கொண்டு, அடிக்கடி ஏழைக் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவது வழக்கம். 2002ம் ஆண்டு, சிங்கியாங்கின் முதலாவது அறக்கொடைத் தூதராக சமிலி பாராட்டப்பட்டார்.

உய்குர் இன யுவதி லு சிடன் யுலுஸ், சமிலி வழங்கிய நிதியுதவியுடன், அவருக்கு மாற்றுச் சிறு நீரகம் பொருத்தப்பட்டது. அவள் கூறியதாவது:

"சமிலி போன்ற அன்புமிக்கவர்கள் பலர் இருக்க வேண்டும் என விரும்புகின்றோம். குறிப்பாக, சமிலி ஓய்வு நேரத்தில் எங்களைப் பார்த்து ஊக்கமளித்தார். தார்மீக ரீதியில் எங்களுக்கு மிகப் பொரும் ஆதரவு அளித்தார். நான் மிகவும் மனமுருகினேன்" என்றார்.

சிங்கியாங்கின் ஹாங் டி பல்கலைக்கழகத்தின் மாணவர் லுகிப். ருகமே குடும்பம் மிகவும் ஏழ்மையானது. கல்வி கட்டணம் செலுத்த முடியாது என்பதை அறிந்த சமிலி, உடனே தம் கையில் இருந்த 4900 யுவானை எடுத்துக்கொடுத்தார்.

"இந்த உதவியைப் பெற்ற மாணவர் மிகவும் மனமுருகினார். அவர் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார். பட்டதாரியாகிய பின், கிராமத்துக்குத் திரும்பி சேவை புரிய வேண்டும் என மனவுறுதி பூண்டதாக அவர் கடிதத்தில் கூறினார். கிராமம், இத்தகைய திறமைசாலிகளை கூடுதலாகப் பயிற்றுவித்து அவர்களை கீழ்மட்டத்துக்குச் சேவை புரிய செய்ய வேண்டும்" என்றார், சமிலி.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040