பிறரை மனமுருகச் செய்திடும் கதைகள் ஏராளமானவை. சிங்கியாங் அறக்கொடை தலைமை சங்கத்தின் தலைமை செயலர் மா ரி கூறியதாவது:
"சமிலி, இனிமையான பாட்டொலி மூலம், சிங்கியாங்கிற்கும் மக்களுக்கும் தனது அன்பினை வெளிக்கொணர்கின்றார். அவரது ரத்தத்தில், கலை மீதான உளமார்ந்த அன்பும், பொது நலன் லட்சியத்திலான ஈடுபாடும் ஓடுகின்றன. சமிலி, மக்கள் மனதில் மதிப்புக்குரிய கலைஞராகவும், பொது நலன் லட்சியத்தின் தூதராகவும் திகழ்கின்றார்."
அவரது ஓய்வு நேரத்தில், படிப்பவர்களுக்கும், இன்னல்மிக்கவர்களுக்கு உதவி வழங்குவதும் ஆகிய இரண்டையும் விரும்பமுடன் செய்கின்றார், கல்வி மிகவும் முக்கியமானது என அவர் கருதுகின்றார். நடிகர் என்றால், இடைவிடாத கல்வி தேவை. அப்போது தான் முன்னேற முடியும். மனிதருக்கு வாழ்க்கை என்பது ஒருமுறை மட்டும் தான். எனவே, சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று சமிலி கருதுகின்றார்.