• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
"உலகளவில் கனவை நாடுதல்" எனும் சுவாங் இனத்தின் நடன நாடகம்
  2015-07-08 15:58:14  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டனின் லண்டன், பிரான்ஸின் பாரிஸ், ஜெர்மனியின் ஃபரன்க்பூர்ட் ஆகிய மூன்று மாநகரங்களில் அரங்கேறிய பிறகு, "உலகளவில் கனவை நாடுதல்" என்ற சீனாவின் பெரிய ரக நடன நாடகம் பிப்ரவரி 18ஆம் நாள் "ஐரோப்பிய தலைநகர்" என அழைக்கப்படும் பிரசல்ஸில் அரங்கேறியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு வாரியங்கள், பெல்ஜிய அரசு, சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகளும், உள்ளூர் வாழ் சீனர்களும் ஆக 800 பேர் ஒன்றுகூடி, மறக்க முடியாத இரவை கழித்தனர். இந்த அரங்கேற்றம், சீன-ஐரோப்பிய தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 40ஆம் ஆண்டு நிறைவு நடவடிக்கைகளின் திரையை அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது.

பிரசல்ஸில் உள்ள தேசிய நாடக அரங்கம், விளக்குகளாலும், வண்ணத் துகில்களாலும் அலங்கரிக்கப்படுகின்றது. சீன பாணியுடைய பொருட்கள் எங்கெங்கும் காணப்படுகின்றன. குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நன் நிங் நகரின் கலை நாடக அரங்கம் இயற்றிய "உலகளவில் கனவை நாடுதல்" என்ற நடன நாடகம் இங்கே அரங்கேறியது. இந்த அரங்கேற்றம் இரண்டு மணி நேரம் நீடித்தது. நாடக அரங்கத்தில் கரவொலி அடிக்கடி கேட்டது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040