• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
"உலகளவில் கனவை நாடுதல்" எனும் சுவாங் இனத்தின் நடன நாடகம்
  2015-07-08 15:58:14  cri எழுத்தின் அளவு:  A A A   

"தொலைத்தூர இடத்தில் ம லேவின் பயணம்" என்னும் சுவாங் இனத்தின் நாட்டுப்புற செவிவழிக் கதையின் அடிப்படையில் இந்த நடன நாடகம் இயற்றப்பட்டது. லே என்பது, சுவாங் இன மொழியில் மகன் என்று பொருள். தாய் மகனுடன் சேர்ந்து, தங்களது பழங்குடியினரின் இன்பத்துக்காக, இன்னல்களைச் சமாளித்து, தொலைத்தூர இடங்களுக்கு சென்று சூரியனை நாடுவது இச்செவிவழி கதையில் விவரிக்கப்படுகிறது. "உலகளவில் கனவை நாடுதல்" என்ற நடன நாடகம், சீன வெளிநாட்டுப் பண்பாட்டுக் குழுமத்தின் கீழுள்ள சீனத் தேச பாணி என்னும் திட்டப்பணியின் நடவடிக்கைகளில் ஒன்றாகும். இந்த வெளிநாட்டுப் பண்பாட்டுப் பரிமாற்றத் திட்டப்பணி 2009ஆம் ஆண்டு துவக்கப்பட்டது முதல் இது வரை, சீனாவின் தலைசிறந்த நடன நாடகங்களை உலகின் பல்வேறு இடங்களில் பரவல் செய்ய பாடுபட்டு வந்துள்ளது.

"உலகளவில் கனவை நாடுதல்" என்ற நடன நாடகத்தின் கலை தலைமை கண்காணிப்பவர் சென் சியாவ் லிங் அம்மையார் பேசுகையில், ஐரோப்பிய நாடுகளிலுள்ள அரங்கேற்றத்துக்கு ஏற்ப, இந்த அரங்கேற்றத்தின் சுருக்கப் பதிப்பை சிறப்பாக இயற்றியுள்ளதாக தெரிவித்தார். அரங்கேற்றுபவரின் எண்ணிக்கையும், அரங்கேற்ற சாதனங்களும் குறைந்துள்ள போதிலும், நடன நாடகத்தின் மிக தலைசிறந்த பகுதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

"முதலில், இந்த நடன நாடகம், குவாங் சி பிரதேசத்தின் செழிப்பான பண்பாட்டு வளங்களின் அடிப்படையில் இயற்றப்பட்டது. இந்த நடன நாடகத்தில், இசை, அரங்கு காட்சியமைப்பு, ஆடை ஆகியவை, சுவாங் இனத் தனிச்சிறப்பு மிக்கவை. இரண்டு, இந்த நடன நாடகம், பழமை வாய்ந்த கதையை விவரித்த போதிலும், தற்காலத் தனிச்சிறப்பு வாய்ந்தது. இது சுவாங் இனத்தவர்கள் தலைமுறை தலைமுறையாக கையேற்றும் உறுதிப்பாடு, துணிவு ஆகியவை படைப்பு எழுச்சியை வெளிப்படுத்துகின்றது. இது மட்டுமல்ல, செழிப்பான பண்பாடுகளை வெளிப்படுத்துகின்றது. இந்த நடன நாடகத்தில் உள்ள பாடல்கள் சுவாங் இன மொழியில் பாடப்படுகின்றன. மூன்றாவதாக, நவீன கருத்தில் இந்த நடன நாடகம் இயற்றப்பட்டது. 16 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டு அது அரங்கேறிய பிறகு, கலை துறை பிரமுகர்களின் பாராட்டை பெற்றுள்ளது " என்றார் அவர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040