• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
"உலகளவில் கனவை நாடுதல்" எனும் சுவாங் இனத்தின் நடன நாடகம்
  2015-07-08 15:58:14  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சீனாவின் தூதாண்மை பிரதிநிதிக்குழுத் தலைவர் யாங் யன் யீ பேசுகையில், இவ்வாண்டு சீன-ஐரோப்பிய தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 40ஆம் நிறைவு ஆண்டாகும். சீன-ஐரோப்பிய கூட்டாளி ஆண்டுமாகும். சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பல கொண்டாட்ட நடவடிக்கைகளை நடத்தும். உலகளவில் கனவை நாடுதல் என்ற பெரிய ரக நடன நாடக அரங்கேற்றம், சீனாவும் ஐரோப்பிய நாடுகளும் நாகரீக பாலத்தை உருவாக்குவதற்கான முக்கிய அம்சமாகும் என்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"இந்த அரங்கேற்றம் மூலம், ஐரோப்பிய நாட்டு மக்களுக்கு சுவாங் இனம் மற்றும் சீனத் தேசம் இன்னல்களைச் சமாளி்த்து, பிரகாசத்தை நாடும் தலைசிறந்த பாரம்பரியம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தவிர, சுவாங் இனத்தின் ஏராளமான நாட்டுப்புற இலக்கியப் படைப்புகள் மற்றும் வேறுபட்ட செழிப்பான கலை வெளிப்பாட்டு முறை மூலம், ஐரோப்பிய நாட்டு மக்கள் சீனாவின் சிறுபான்மை தேசிய இன நடையுடை பாவனைகளை மகிழ்ந்து அனுபவித்து, சீனாவில் பல்வேறு தேசிய இனங்கள் சுமுகமாக வாழ்வு நடத்தும் சூழலை உணர்ந்து கொண்டு, உயிர், உலகம் மற்றும் வாழ்க்கை பற்றி சீன மக்கள் கொண்டுள்ள கருத்துக்களை அறிந்து கொண்டுள்ளனர். மேலும் முக்கியமானது, இரு தரப்பு மக்கள் சமத்துவம், மதிப்பு, அன்பு ஆகியவற்றுடன், இவ்வுலகத்தை உணர்ந்து, போற்றுதல் மற்றும் சகிப்புதன்மை என்ற மனப்பான்மையுடன் உலகில் உள்ள வேறுபட்ட நாகரீகத்தை அறிந்து கொள்வதைத் தூண்டி, சீன மற்றும் ஐரோப்பிய நாட்டு மக்களுக்கிடையே ஒன்றுக்கொன்று புரிந்துணர்வை இந்த அரங்கேற்றம் விரைவுபடுத்தியுள்ளதாகும்" என்றார் அவர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040