• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குவாங் சி சுவாங் இன தன்னாட்சிப் பிரதேசத்தின் பாடல் அரங்கு
  2015-07-17 15:13:13  cri எழுத்தின் அளவு:  A A A   

சுவாங் இனத்தவர்களிடையே இவ்வளவு அதிகமான நாட்டுப்புறப் பாடகர்கள் இருப்பதற்குக் காரணம் என்ன? வூ மிங் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாங் இன விவசாயி சு சியே ஜிங் கூறுகையில், சாதாரண வாழ்க்கையில், சுவாங் இனத்தவர்கள், பாடிக்கொண்டே இருப்பதால் நல்ல குரல் வளம் பெற்றனர். அவர்கள் வழக்கமாக நாட்டுப்புறப்பாடல்கள் மூலம் தத்தமது விருப்பத்தையும் உணர்ச்சியையும் தெரிவிப்பதாகும் என்றார்.

"சுவாங் இன முதியோர்கள், பகலில் உழைத்து களைப்படைந்தனர். எனவே, அவர்கள் தமது விருப்பங்களை, நாட்டுப்புறப்பாடல் மூலம் வெளிப்படுத்துகின்றனர். இளைஞர்களும் அப்படியே. காதலர்களும் நாட்டுப் புறப்பாடல் போன்ற வடிவத்தில் காதலை வெளிப்படுத்துகின்றனர். குழந்தைகளும் சுவாங் இனம் பயன்படுத்தும் குழந்தை வரிகளைக் கொண்டு மகிழ்ச்சி, கோபம், சோகம் ஆனந்தம் ஆகியவற்றை வெளிக்காட்டுகின்றனர்" என்றார், அவர்.

சீன பாரம்பரிய நாட்காட்டியின் படி, மார்ச் மூன்றாம் நாள் முதல் மே ஐந்தாம் நாள் வரை, அதாவது, மார்ச் திங்கள் முதல் ஜுன் திங்கள் வரை வூ மிங் மாவட்டத்தில் பெரிய மற்றும் சிறிய பாடல் அரங்குகள் நடைபெறுகின்றன. இந்நேரத்தில் பாடல் அரங்குகள் நடைபெறுவது எதற்காக? வூ மிங் மாவட்டத்தின் பாட்டு மன்னர் என பாராட்டப்பட்டு வரும் மங் சுயே சன், செய்தியாளரிடம் கூறியதாவது:

"ஆண்டுதோறும் மே ஐந்தாம் நாள், உள்ளூர் மக்கள் வயலில் விளையும் புற்களைக் களைய வேண்டும். அப்போது முதல் பாடுவதற்கு நேரம் இல்லை. இலையுதிர்காலத்தில் அறுவடை செய்த பின் தான் பாட துவங்குவர்."

பாடல் அரங்கு உருவெடுத்தது குறித்து இந்த பாட்டு மன்னர் அழகான கதை ஒன்றை சொன்னார். வெகு காலத்துக்கு முன்பே, சுவாங் இன பழம்பெரு பாடகரின் மகள் மிகவும் அழகானவள். நாட்டுப்புறப்பாடலில் தேர்ச்சி பெற்றவர். எனவே, சிறந்த பாடகர் ஒருவரை தமது மணமகனாக்க விரும்பினார். ஆதலால், பல்வேறு இடங்களின் இளம் பாடகர்கள் பாட்டுப் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் இப்பெண்ணை மணம் செய்ய வருகை தந்தனர். இந்த பாட்டுப் போட்டியின் அடிப்படையில், பாடல் அரங்கு தொடங்கியது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040