• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:புளிப்பு மற்றும் காரம் கலந்த உருளைக்கிழங்கு வறுவல்
  2015-07-06 20:24:14  cri எழுத்தின் அளவு:  A A A   

சக்திவேல்....... இன்றைக்கு, சுவையான ஒரு உருளைக்கிழங்கு வறுவலை அறிமுகப்படுத்துகிறோம்.

ஜெயா....... சீன மொழியி்ல் அதன் பெயர், சுவான்லாதூடோசி.

சக்திவேல்....... தூடோசி என்பது நீண்ட வடிவில் வெட்டப்பட்ட உருளைக்கிழங்கு துண்டுகள் ஆகும்.

ஜெயா.......ஆமாம், இந்த சமையல், தமிழில் சொல்வதென்றால், புளிப்பு மற்றும் காரம் கலந்த உருளைக்கிழங்கு வறுவல் என்று அழைக்கலாம்.

சக்திவேல்....... சரி, வழக்கம் போல, முதலில் தேவைப்படும் பொருட்களை, உங்களிடம் கூறுகின்றோம்.

ஜெயா....... கவனமாகக் கேட்டு, குறித்துக் கொள்ளுங்கள், நண்பர்களே.

சக்திவேல்.......பெரிய உருளைக்கிழங்கு ஒன்று, மிளகாய் ஒன்று, காய்ந்த சிறிய சிவப்பு மிளகாய் 2, பூண்டு சில துண்டுகள், பச்சை வெங்காயம் மற்றும் இஞ்சி சில துண்டுகள் ஆகியவை.

ஜெயா....... தவிரவும், எண்ணெய் 3 கரண்டி, மிளகு தேவையான அளவு, புளிப்பு சாறு 3 கரண்டி, உப்பு ஒரு கரண்டி, மிளகாய் எண்ணெய் ஒரு கரண்டி ஆகியவை தேவைப்படுகின்றன.

சக்திவேல்....... தேவையான பொருட்கள் தயார். இப்போது, ஆயத்த பணிக்கு போவோமா?

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040