• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கற்பனை கதைகள்]

ஐம்பெரும் சுவர்க்க மலைகள்

முன்னொரு காலத்தில் சீன தேசத்தில் விண்ணும் மண்ணும் மோதிக்கொண்டன. வானத்திலே பெரியதொரு விரிசல் விழுந்தது. பூமி பிரிந்து அகலமாந ஒரு பள்ளம் ஏற்பட்டு விட்டது. நெருப்பும் வெள்ளப் பெருக்கும் காடுகளை அழித்தன, மலைகளைத் தகர்த்தன. கொடிய விலங்குகளும் பேய்பிசாசுகளும் தட்டிக்கேட்க யாருமின்றி நடமாடின. இந்த அளவிட முடியாத அவலத்தைச் சமாளிக்க முடியாமல் மனித குலம் திண்டாடிக் கொண்டிருந்தது.

மனிதர்களின் ஓலத்தைக் கேட்டாள் தேவதை நுவா. அவள் தான் முதலாவது மனிதனைப் படைத்தவள். தனது பிள்ளைகள் படும் துயரத்தைத் தாங்க மாட்டாமல் அவள் கொடிய விலங்குகளைக் கொன்று குவித்தாள் பேய் பிசாசுகளை அடித்து விரட்டினாள். வெள்ளத்தை வடியச் செய்தாள். எல்லாம் முடிந்த பிறகு, கிழிந்து போன வானத்தில் ஒட்டுத்தையல் போடத் தொடங்கினாள். சாதாரண சட்டைக் கிழிசலைத்தைப்பதே பெரும்பாடாக இருக்கும் போது. இவ்வளவு பெரிய ஆகரயக் கிழிசலை எப்படித் தைப்பது?ஒரு தந்திரம் செய்தாள். உலகத்தில் உள்ள விறகுகளை எல்லாம் சேகரித்து, ஒன்றன் மீது ஒன்றாக வானத்தின் உயரம் வரை அடுக்கினாள் பிறகு அந்த விறகுக்குவியலின் உச்சியில் ஊதா, வெள்ளை, மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்புக் கற்களை வைத்தாள் பூமியின் மையத்தில் நின்றுகொண்டு, அந்த விறகுக்கு வியலுக்குத் தீ மூட்டினாள், விறகுகள் யாவும் தீப்பற்றி எரிந்தன. அந்த வெப்பத்தில் பல வண்ணக்கற்கள் உருகி, வானத்தில் ஏற்பட்ட கிழிசல் பகுதி மீது ஒரு வண்ணக் குழம்பாக பாய்ந்தது. இதன் விளைவாக கிழிந்த வானம் ஒட்டிக்கொண்டது. ஆனால், ஒரு சின்னப் பிரச்சினை, வானம், வடமேற்குத்திசை நோக்கி தொய்வாக சரிந்து விட்டது. இதனால், சூரியனும் நிலாவும் ஒரே திசையில் போய் உட்கார்ந்து கொண்டன. பூமியோ தென்கிழக்குத்திசையில் தாழ்ந்து விட்டது. இதனால் பூமியில் எல்லா நதிகளும் ஓடைகளும் ஒரே திசையில் பாய்ந்து, பிரம்மாண்டமான கடலாக உருவெடுத்து விட்டது. கடலுக்கு அடியிலும் ஒரு பெரிய பள்ளம் அந்தப் பள்ளத்திற்குள்ளே எவ்வளவு தண்ணீர் போனாலும், நிரம்பி வழியவில்லை. இதனால், வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் போனது.

அந்தக் கடலடிப் பள்ளத்திற்கு உள்ளே ஐம்பெரும் தெய்வீக மலைகள் காணப்பட்டன. அவற்றில் இருந்த வெள்ளைப் பறவைகளும் விலங்குகளும் மரங்களும் நேர்த்தியான முத்துக்களையும் மாணிக்கங்களையும் பவழங்களையும் ஏராளமாகத் தந்தன. ஒவ்வொரு மலையின் உச்சியிலும் தங்கத்தால் அரண்மனைகளைக் கட்டி, அவற்றில் பொன்னாடை பூண்ட தேவர்களும் தேவதைகளும் மகிழ்ச்சியாக வசித்தனர். ஆனால், ஒரே ஒரு சின்னப் பிரச்சினை, இந்த மலைகள் யாவும் நீரில் மிதந்து கொண்டிருந்தன. காற்று பலமாக வீசும் போது, மலைகள் அடித்துச் செல்லப்பட்டன. அப்படிப்பட்ட நேரங்களில் தெய்வங்களுக்கு உறைவிடம் இல்லாமல் போனது உடனே சொர்க்கப் பேரரசர் பிரம்மாண்டமான பதினைந்து ஆமைகளை அனுப்பி, அந்த மலைகளை முதுகில் சுமத்து கொண்டு வரச்சொன்னார். ஒவ்வொன்றும் மூன்று ஆமைகளாக ஐந்து குழுக்களாகப் பிரிந்து, மலைகளைக் கொண்டுவரச் சென்றன. ஒரு ஆமை ஒரு மலையைத் தனது முதுகில் ஏற்றிக் கொள்ள, மற்ற இரண்டு ஆமைகளும் காவலாக வந்தன. ஒரு தடவை, ஒரு பெரிய அரக்கன் மீன்பிடிக்க வந்தான். அவன் விஷயம் தெரியாமல், ஆறு ஆமைகளைப் பிடித்துச் சென்றான். இதனால், இரண்டு தெய்வீக மலைகள் வட துருவத்துக்கு அடித்துச் செல்லப்பட்டு, அங்கு கடலில் மூழ்கின. ஆகவே, இப்போது, சீனாவின் கிழக்குக் கடலோரத்தில் மூன்று மலைகள் மட்டுமே உள்ளன.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040