• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கற்பனை கதைகள்]

சாங் எர் சீமாட்டியின் நிலாப் பயணம்

சீன சந்திர விழா அல்லது இடை இலையுதிர் விழா சீனர்களின் சந்திர நாட்காட்டியின்படி எட்டாவது மாதத்தின் 15வது நாலில் வருகிறது. இளவேனில் விழா மற்றும் பறக்கும் டிராகன் படகு விழா என்பவற்றுடன் சீனாவின் மூன்று முக்கியமான பாரம்பரிய விழாக்களில் இதுவும் ஒன்றாகும். சாங் எர் சந்திரனுக்கு பறக்கின்றாள் என்ற கதையானது சந்திர விழாவுடன் தொடர்புடைய நன்கு அறியப்பட்ட ஒரு கட்டுக்கதை ஆகும்.

சீமாட்டி சாங்எர் ஒரு சந்திர மண்டல கடவுள் ஆவர். அவளுடைய கணவன் புகழ்பெற்ற சண்டை வீரனான, வில்லாளி கோ இ எனப்படுபவன். கொடிய மிருகங்கள் ஒரு முறை பூமியில் மக்களை வருத்தினர். கோ இயும் அவருடைய மனைவியும் இந்த கொடிய மிருகங்களை அடக்குவதற்காக பூமிக்கு அனுப்பப்பட்டனர். கோ இ தனது வேலையை முடித்தார். ஆரம்பத்தில் பத்து சூரியன்கள் பூமியை சுற்றி வந்தன. ஒவ்வொன்றும் பூமிக்கு ஒளியேற்றுவதற்கு அவற்றின் முறையை எடுத்தன. எப்படியாயின் ஒரு நாள் எல்லா பத்து சூரியன்களும் ஒன்றாக தோன்றின. அவற்றின் வெப்பத்தால் பூமியை பொசுக்கின. ஆறுகள் வறண்டன. காடுகளும் தாவரங்களும் அழிக்கப்பட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்தனர். கோ இ தனது சக்தியினால் ஒன்பது சூரியன்களை கீழே வீழ்த்தினார். இது விண்ணுலக சக்கர வர்த்தியை கோபமடையச் செய்தது. ஏனென்றால் எல்லா சூரியன்களும் அவருடைய மகன்கள் ஆகும். இதில் ஒன்பதை கோ இ கொலை செய்தமையால் வில்வீரனும் அவனின் மனைவியும் விண்ணுலகத்தில் இருந்து தண்டிக்கப்பட்டு பூமியில் வேட்டையாடி வாழும்படி அனுப்பப்பட்டனர். கோ இ தனது ஒரு உயிர்வாழ்வதற்கு அச்சப்படக் கூடிய வாழ்க்கையை வாழ்வதை கண்டு கவலையடைந்தான். மேற்கு தாயாகிய அரசியிடம் இருந்து உயிர்க் காப்பு அமிர்தத்தை பெற்றான். இந்த மருந்து மூலம் மனிதனை விண்ணுலகத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியது. தூரதிஷ்டவசமாக இது இருவருக்கும் போதாமல் இருந்தது. அவன் அந்த மருந்தை தனது மனைவிக்குத் தெரியாமல் மறைத்தான். ஆனால் சாங் எர் பூமியில் அவளுடைய புதிய வாழ்க்கையை விரும்பவில்லை. அவள் கோ இ வீட்டுக்கு வெளியே சென்ற வேளையில் அந்த அமிர்தத்தை கண்டான். அவள் அதை எடுத்து விழுங்கினாள். அவள் சந்திரனுக்குப் பறந்தாள்.

கோ யீ அவனுடைய தெய்வீக அழகான மனைவியை அதிகமாக நேசித்தான். அவன் சந்திரனை சுட்டு வீழ்த்த வில்லை. அவன் பூமியில் தனியாக வேட்டையாடி வாழ்ந்தான். வில்வித்தை கற்பித்தான். அவன் குடி போதையில் இருந்த போது பொறாமையுள்ள அவனுடைய மாணவர்களால் கொல்லப்பட்டு இறந்தான். சாங் எர் சந்திர மாளிகையில் இருந்தாள். அவள் தனிமையினாலும் மனவருத்தத்தினாலும் ஒரு போதும் சந்தோஷத்தை அடையவில்லை. ஏனென்றால் அவள் அவளுடைய கணவனுடன் மீண்டும் ஒரு போதும் மகிழ்ச்சியான வாழ்க்கையை கொண்டிருக்கவில்லை. அவள் ஒரு சிறிய முயலுடன் மட்டும் சேர்ந்து வாழ்ந்தான்.


1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040