• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[இசை நாடகக் கதைகள்]

ஜாஒ குடும்பத்தின் அநாதைக் குழந்தை

இக்கதை ஏறத்தாழ கி.மு. 8ம் நூற்றாண்டுக்கும் கி.மு. 5ம் நூற்றாண்டுக்கும் இடையில் நிகழ்ந்தது.

இது சீனாவின் வரலாற்றில் வசந்த மற்றும் இலையுதிர் காலத்தில் நிகழ்ந்தது. அந்தக் காலத்தில் பல மாகாணங்கள் ஒன்று சேர்ந்து இருந்தன. அவைகளில் ஒன்று ஜின் மாகாணம் இரண்டு முதுநிலை அதிகாரிகள் அங்கு இருந்தார்கள். ஒருவர் ஜாஒ துன் ஆவர், இவர் ஜின்னுக்கு ஒரு விசுவாசமுள்ள அலுவலர் ஆவர், மற்றவர் ரூ அன்கு ஆவார். இவர் ஒரு இராணுவத் தலைவர். இருவரும் ஒத்துப் போகவில்லை.

ரூ என்பவர் ஜாஒவை கொல்லுவதற்கு பல தந்திரங்களை பயன்படுத்தினார். இறுதியாக ஜின் சக்கரவர்த்தி அவனுடைய பொறிக்குள் விழ்ந்தார். அவர் ஜாஒ தனக்கு விசுவாசமாக இல்லை என நினைத்து, அவர் ஜாஒவின் குடும்பத்தையும் அதே போன்று அவனுடைய பணியாளர்களையும் கொல்லும் படி கட்டளை இட்டார். ஜாஒவின் மருமகளான சுயாங் ஜி விதிவிலக்களிக்கப்பட்டாள். சுயாங் ஜி உயிர் தப்பினாள் ஏனென்றால் அவள் இளவரசியாக இருந்தாள்.

அந்த நேரத்தில் சுயாங் கருவுற்றிருந்தாள். பின்னர், ஒரு மகனை பெற்று எடுத்தாள். அவள் அவனுக்கு ஜாஒ குடும்பத்தின் அநாதை என பெயரிட்டாள். தனது மகன் வளர்ந்து பெரியவனாகும் போது ஜாஒவு குடும்பத்திற்காக பழிவாங்குவான் என நம்பிக்கொண்டிருந்தாள்.

ஜாஒ குடும்பத்தில் ஒரு மகன் இருப்பதாக அறிந்த ரூ, அம்மகனை கொல்ல விரும்பினான்.

ஒருவர் அக்குழந்தையைக் காப்பாற்ற விரும்பினார். அவர் ச்சன் இன் என்ற ஒரு வைத்தியர். அதேநேரம் ஜாஒ குடும்பத்தின் நண்பனாகவும் இருந்தார். ச்சன் குழந்தையை காப்பாற்றுவதற்காக இளவரசிக்கு சிகிச்சையளிக்கச் செல்வது போல ஒரு மருத்துவ பெட்டியை கொண்டு சென்றார். அவர் குழந்தையை மருத்துவ பெட்டிக்குள் வைத்து அரண்மணைக்கு வெளியே எடுத்து சென்றார். ஆனால், அரண்மனை காவலர் வாயிலை தாண்டும் போது பெட்டியை சோதனையிட்டு கண்டுப்பிடித்தார். ச்சன்னுக்காகவும் குழந்தைக்காகவும் இரக்கம் காட்டி அவர்களை போவதற்கு காவலர் அனுமதித்தான். பின்னர், தற்கொலை செய்தான். குழந்தை தப்பிவிட்டது என்பதை ரூ அறிந்த போது அக்குழந்தையை வெளியில் தேடும்படி பொது மக்களுக்கு கட்டளை இட்டான். இல்லாவிட்டால் மாகாணத்தில் உள்ள எல்லா குழந்தைகளையும் கொல்லுவதாக கூறினான்.

இந்த செய்தி அறிய வந்த போது, அது பற்றி ஜாஒவின் ஒரு நண்பரான ஹொங் சுன்னுடன் ச்சன் இன் ஆலோசித்தார். ஜாஒவின் குழந்தையின் வயதை போன்று ஒரே வயது குழந்தையை ச்சன் இன் வைத்திருந்தார். ச்சன் இன் தனது குழந்தையை ஹொங் சுன்னிடம் கொடுத்தார். பின்னர், ரூதுடம் சென்று ஹொங் சுன் ஜாஒ குடும்பத்தின் குழந்தையை தாம் வைத்திருப்பதாக கூறினார். இதைக் கேட்டு ஹொங் சுன்னையும் குழந்தையும் ரூ கொன்றான்.

ரூ மிக மகிழ்ச்சியாக இருந்தார். அவர் ஜாஒ குடும்பத்தின் குழந்தை கொல்லப்பட்டுவிட்டதாக நினைத்தார். இவர் தானாக சொந்த குழந்தையை கொண்டிருக்கவில்லை. எனவே அவர் செங் இன்னின் குழந்தையை (இது உண்மையாக ஜாஒ குடும்பத்தின் குழந்தை)தனது தத்தெடுத்த மகனாக கருதி இக்குழந்தைக்கு போர்க் கலையினைக் கற்பித்தார். ஜின் மாகாணத்தில் உள்ள மக்கள் ஜாஒ குடும்பத்தில் இருந்து குழந்தையை கொலை செய்ய உடந்தையாக இருந்து நாசகாரன் என ச்சன் இனை நினைத்தனர். அவர்கள் எல்லோரும் அவரை குறை கூறினார்கள். ஆனால் ச்சன் இன் குழந்தையை வெளியில் எடுத்து வந்து வளர்த்ததை பற்றி எதுவும் விவரிக்கவில்லை.

பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் வெய் ஜியாங் என்ற இன்னொரு அலுவலகர் எல்லையில் இருந்து வந்தார். இந்த முழுக்கதை பற்றி கேற்வியுற்று மிகக் கோபம் அடைந்தார். வெய் சியாங் ச்சென் இன்னை மிக கடுமையாக அடித்தார்.

ச்சன் இன் ஓர் வார்த்தை கூட கூறவில்லை. மாறாக வெய் ஜியாங் அவரை அடித்தால் இது குழந்தை பழிவாங்குவதற்கு உதவும் என அவர் நம்பினார். உண்மை தெரிய வந்தால் வெய் ஜியாங் உதவி செய்யலாம். அவர் உண்மைக் கதையினை சொன்னார். வெய் ஜியாங் அநாதை குழந்தைக்கு உதவி செய்வதாக உதுதியளித்து புறப்பட்டார்.

ச்சன் இன் வீட்டுக்கு திரும்பிச் சென்று குழந்தைக்கு நடந்த சம்பவங்களை கூறினார். குழந்தையும் கதையைப் பற்றி தெரிந்து பழிவாங்குவதாக உறுதியளித்தான்.

1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040